மொழி 28

5.4K 248 124
                                    

சாதனாவிற்கு அடிபட்டுவிட்டது என்பதை அறிந்தவுடனே துடிதுடித்துப் போன பிரசாந்த் சந்துருவிடம் பிரியாவின் வீட்டு விலாசத்தை கேட்டு அறிந்தவுடன் சந்துருவிற்காகக் கூட காத்திராமல் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டான்..

காலிங் பெல்லை அடிக்கவும் பிரியா கதவினைத் திறந்தாள்.. " யார் வேணும் " என்று படபடப்பாக அவள் கேட்கவும் " நீங்க பிரியாவா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சந்துருக்கு போன் பண்ணிருந்தீங்களே " என்று அவன் எதிர் கேள்வி கேட்கவும்,

" அது அது.. நான் தான் உள்ள வாங்க " என்று திக்கித் திணறிக் கூறினாள்.. அவள் நடந்து கொண்ட விதமும் அவளது திருட்டு முழியும் எதுவோ ஒன்று சரியில்லை என்பதை உணர்த்த " சாதனா எங்கே சிஸ்டர்.. அவள நான் உடனே பார்க்கனும் " என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

" ப்ரோ எதுக்குப் பதட்டப்படறீங்க..சாதனா நல்லாத்தான் இருக்கா.. இன்னைக்கு போன வெச்சிட்டு வந்துட்டாளா.. அதான் நான் பேசுனேன்.. அதோ அந்த ரூம்லதான் இருக்கா.. போய் பாருங்க " என்று ஒரு ரூமைக் காட்டினாள்..

அவன் அந்தப் புறம் நகரவும் " அப்பாடா
நாம தப்பிச்சோம் " என்று பெருமூச்சு ஒன்றினை விட அவன் சந்தேகமாகத் திரும்பிப் பார்த்தான்.

" என்ன ப்ரோ நீங்க உங்க ஆளப் போயி பார்க்காம இந்த ஆண்டிய போய் மொறச்சிட்டு இருக்கிங்க.. உள்ள போங்க ப்ரோ " என்று கூறிவிட்டு அவளுக்கு சம்மந்தமே இல்லாத சமையலறைப் பக்கம் சென்று விட்டாள்..

பிரசாந்த் அவளை முறைத்துவிட்டு வேகமாக அந்த அறைக் கதவினைத் திறந்தான்..
அங்கே சாதனா இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை.. ஆனால் அவளது குரல் கேட்டது..
அவன் அதிர்ச்சியில் ஆடிப்போனான்.. இனி அவன் கேட்க முடியாது என்று நினைத்த, தன்னவளுக்குச் சொந்தமான அதே குரல்..

ஹாய் பிரசாந்த்.. என்மேல நீ இப்போ கொலை வெறில இருப்பேனு தெரியும்.. ஆனா அவசரத்துல என்னைக் கொன்னுடாத.. அப்ரோ என் டார்ச்சர் இல்லாம நிம்மதியா இருந்தா என் ஆத்மா சாந்தியடையாது..நான் உங்கிட்ட எப்பவோ உண்மைய சொல்லலாம்னு நினைச்சேன்..

ஆனா உங்க குடும்பத்துல ... சாரி நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாப் பிரச்சனையும் சரியாகி உன்னை அவுங்க புரிஞ்சிகிட்ட பிறகு எல்லாரும் ஒற்றுமையா இருக்குறப்ப தான் சொல்லணும்னு நினைச்சேன்.. அதனால தான் உன்மேல கோபமா இருக்குற மாறி நடிச்சேன்.. இந்த மொக்கை ரீசனுக்காகவானு நீ கேவலமா நினச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது.. வேணும்னா ஆதர திட்டிக்கோ.. அவங்களுக்குத் தான் நம்ப ஞாபகமே இல்ல.. நல்லா வாங்கட்டும்...

நான் எதையும் வேணும்னே பண்ணல.. உன்னோட பொறந்தநாளைன்னைக்கு சர்பிரைசா சொல்லலாம்னு என் பிரண்ட் பிரியாதான் ஐடியா கொடுத்தா.. சரி அதை எப்படி எக்ஷ்க்யூட் பண்ணலாம்னு நினைக்கும் போது தான் மார்னிங் நீயென்னை ரொம்ப டென்சன் படுத்திட்ட.. அதான் நேரா பிரியாக்கிட்டவே ஐடியா கேக்கலாமனு இங்க வந்துட்டேன்..

நான் உன்மேல வெச்சிருக்கிற காதல ஊரேக் கேட்கிற மாதிரி கத்தி சொல்லனும்னு நினைச்சேன்.. ஆனா என்னால அதைப் பண்ண முடியாது.. அட்லிஸ்ட் என் குரல்லயாவது சொல்லலாம்னு நினைச்சேன். அதான் இந்தப் பழைய டெக்னிக்.. என்னை கேவலமா திட்டனும் போல தோனுதா..அப்டிலாம் திட்டாத பிரசாந்த்.. அப்ரோ இதைவிட கேவலமான ஐடியாலாம் கைவசம் இருக்கு.. அதைலாம் உன்னால தாங்க முடியாது பார்த்துக்கோ

அப்ரோ நானும் உன்னைமாறி ஒரு சிடுமூஞ்சி தான்... என்னால இதைவிட கீழ இறங்கிவர முடியாது..என்ன பண்றது நான் இப்படியே வளர்ந்துட்டேன்.. நீ என்னைக் குறை சொல்றதுல எந்த அர்த்தமும் இல்ல..உன் மேல எனக்கு எப்போ லவ் வந்துச்சு.. அது இதுன்னு எங்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி நிறைய இருக்கும்னு தெரியும்..சோ டைம் வேஷ்ட் பண்ணாம சீக்கிரமா வந்து சேரு.. பாய் என முடிந்தது அந்தக் குரல்

இதைவிடக் கேவலமா யாரும் லவ் புரோபோஸ் பண்ண முடியாது என எண்ணியவன் கோபமாக அந்த அறையினை விட்டு வெளியே வந்தான்..

காதலின் மொழி (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang