மொழி 21

5.9K 260 149
                                    

இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரசாந்தின் தாயார் லட்சுமி கோவமாக வெளியே வந்தார்.

" பிரசாந்த் நீ காரணம் இல்லைனாலும் ஒரு வகைல அவ பேச்சு இழக்க உன் காதல் தான் காரணமா இருந்திருக்கு. மறுபடியும் எதாவது பிரச்சனை நடந்துச்சுனா கமலா முகத்துல நம்பனால முழிக்க முடியாதுடா" என்றார் கோபமாக
 
தனது குடும்பத்தில் தன் உணர்வுக்கு எப்போதும் மரியாதை இருக்காது  என்ற எண்ணத்தால்
" அம்மா அவ நல்லதுக்கு தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்.. ஆனா என்னைக்கு நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணிருக்கிங்க. எல்லாரும் இருந்தும் அநாதையா நான் இருக்கேன்மா.. ப்ளீஸ் இது என்னோட வாழ்க்கை இதுல தலையிடாதிங்க " என்றான் தன் தாய் முன்னே கடிந்து பேச முடியாத இயலாமையோடு

லட்சுமி அவனை சமாதனப்படுத்த வரவும் அதைத் தடுத்த அதிதி " ஆன்ட்டி விடுங்க, அவன் ஒன்னும் தப்பான எண்ணத்துல விரும்பலையே, கல்யாணம் பண்ணிக்கறேனு தான சொல்றான்.. இப்ப உங்களுக்கு ஒருவேளை அவ ஏழைங்கறது தா பிரச்சனையா இல்ல ஊமைனு யோசிக்கிறீங்களா " என அவள் கேட்கவும் அவர் ஒரு நிமிடம் விக்கித்துப் போனார்.

" அதிதி என்ன பேசிட்டு இருக்க.. " என பிரசாந்த் அவளை அதட்டவும் அதற்குள் அந்த இடத்தை விட்டு அகன்றார் லட்சுமி..

அடுத்த நாள் காலையில் பிரசாந்த் அவசரமாக ஆபிஸிற்கு கிளம்பி  கீழே வரும்போது வீட்டிலுள்ள அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைக்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அவன் வந்ததைக் கண்ட அதிதியும் அனுவும் அவன் இரு கைகளையும் ஆளுக்கொன்றாய் பிடித்துக் கொண்டு பூஜை அறைக்கு அழைத்துச் சென்றனர். வேதவள்ளி அவனுக்கு குங்குமம் வைத்துவிட்ட பின்பு " எல்லாரும் கிளம்பலாமா " என்றார்..

அனைவரும் எழுந்து வெளியே வந்தனர். " அனு இங்க என்ன நடக்குதுனு சொல்றியா " என்றான் எரிச்சலுடன்.

" எல்லாம் நல்லவிசயம் தான் பேசாம வா" என அதிதி மிரட்ட தன் கோபத்தை அவளிடம் காட்டி அவள் கையை உதறிவிட்டான்.. " இவன் திருந்த மாட்டான் அனு.. இவன் திருந்தவே மாட்டான்.. போயும் போயும் உனக்கு அப்பேர்ப்பட்ட பொண்ணா.. வா நாம அவளுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்க்கலாம் " என அதிதி சப்புக் கொட்ட..

காதலின் மொழி (முடிவுற்றது)Where stories live. Discover now