மொழி 3

8.2K 269 64
                                    

சாதனாவிற்கு வேலை செய்வது பிடிக்காமல் இல்லை.. இருப்பினும் அவளது சிறுவயதில் இந்த வீட்டில் ஏற்பட்ட அனுபவம் அவளை முழுதும் மாற்றியது..
கமலா செய்யும் வேலைக்கு அவர்கள் பணம் தருகிறார்கள்.. தான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் என்றும் இருக்கும்..

இருந்தாலும் இன்று தனது நண்பர்களுக்காக சமைக்க ஒத்துக் கொண்டாள்..

பின்புறம் திரும்பி பாத்திரத்தை எடுத்துக் கொண்டிருந்தவள் எதேச்சையாக திரும்ப தன் முன்னே யாரோ திடீரென்று நிற்பதைக் கண்டு பயந்து கையில் உள்ள பாத்திரத்தைக் கீழே போட்டாள்..

நான் என்ன பேயா.. உனக்கு கண்ணு தெரியல என்று அவன் அதட்டவும் ' பார்க்கவும் அப்படித்தான் தெரியுது ' எனத் தனக்குள்ளே புலம்பிக் கொண்டாள்...

என்ன சொன்ன சத்தமா சொல்லு .. என்றான்..

அவன் மீண்டும் மீண்டும் அதட்டவும் " இங்கப் பாருங்க.. நான் பாட்டுக்குத் தான் இருந்தேன்.. நீங்க தீடிருன்னு வந்து பயப்படுத்திட்டு .. என்னக் குறை சொல்லாதிங்க.. என்னை சமைக்க விடுங்க.. காலேஜ்கு டைம் ஆச்சு " என்று கோபமாகக் கூறி அவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் வேலையைத் துவங்கினாள்..

" உன்னோட மிரட்டல்க்கு எல்லாம் பயப்பட என்னை சந்துருனு நினைச்சியா " என்று உலறிவிட்டு கோபமாக வெளியேறினான். அவனது சம்பந்தமில்லாத பேச்சு இன்னும் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அனைவரும் டைனிங்கில் வந்து அமர்ந்தனர்.. சாதனா உணவை டேபிளில் எடுத்து வைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்....

சந்துரு அவளை வம்பிழுக்க நினைத்து " சாதனா.. சட்னில உப்பே இல்ல.. இட்லி வேகவே இல்ல.. பாஸ்தாவா இல்ல இது இடியாப்பமானும் புரியல " என்று அடுக்கிக் கொண்டிருந்தான்..

" டேய் பொய் சொல்லாதடா .. இதையே குறை சொல்றியே இன்னைக்கு நைட் நீயும் நானும் தான் சமைக்கப் போறோம்.. அதை என்னப் பண்ணப் போற " என்றாள் அனு..

காதலின் மொழி (முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن