முன்கதைச் சுருக்கம்

7.7K 136 65
                                    

முன்கதைச் சுருக்கம்:
மீரா - கிருஷ் என்ற காதல்ஜோடி பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.. அவர்களுக்கு உறுதுணையாக கிருஷின் மொத்தக் குடும்பமும் மீராவின் நெருங்கிய உயிர் நண்பன் உதயும் மற்றும் மீராவின் உடன்பிறப்புகளான மீராவின் தம்பி ராம், அவளது தங்கை நிலா என எப்போதும் இருக்கின்றனர்..

தாய் தந்தையினரை இழந்த மீரா தனது சித்தி சித்தப்பா வளர்ப்பில் இருந்தாள்.. ஆரவ் என்ற கொடியவனால் பின்பு அவர்களையும் இழந்தாள்.. சித்தப்பாவின்
பிள்ளைகளான
ராம் மற்றும் நிலாவினை தனது சொந்த தம்பி தங்கைகளாகவே பாவித்து அவர்களுக்காகவே வாழ்ந்தாள்.. இதற்கிடையில் மீராவினை உண்மையாக காதலித்தும் விதியின் விளையாட்டால் அவளைப் பிரிந்த கிருஷ் பின்பு மீண்டும் தனது காதலின் துணைகொண்டு அவள் மனதில் இடம்பிடித்து அவளையே மணம் செய்து கொண்டான். இது தான் முள்ளும் மலரும் கதையின் கரு..

திருமணத்திற்குப் பிறகு ராமும் நிலாவும் கிருஷின் வீட்டிலே தங்கினாலும் ராம் மட்டும் அடம்பிடித்து பள்ளி மற்றும் கல்லூரி
விடுதிக்கு  சென்றுவிட்டான்.. அதற்கு காரணம் அவர்கள் மேல் பாசம் இல்லை என்று அர்த்தமில்லை..தனது சகோதரியின் தன்மானம் காக்கப்பட வேண்டும் என அவனே யோசித்து எடுத்த முடிவு..

ராம் :
அவன்தான் இந்தக் கதையின் நாயகன்..புகழ்பெற்ற கல்லூரியில் வேளாண்மை பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவன்.
கொஞ்சம் முன்கோபி.. ஆனால் முரடன் இல்லை.. அனைவரிடமும் எளிதாக பழகி நட்பு பாராட்டும் தன்மை உள்ளவன்.. திருமணத்தைப் பற்றி அவன் இன்னும் சிந்திக்கக் கூட துவங்கவில்லை.. அவனுக்கு தனது அக்கா மாமா சொல்வதுதான் வேதவாக்கு. அவர்கள் யாரைச் சொன்னாலும் அவளை வாழ்க்கைத் துணையாக ஏற்கத் தயங்க மாட்டான்..இவ்வாறு
அமைதியாக இருக்கும் இவன் வாழ்வில் இனி நடக்கவிருக்கும் திடீர்சம்பவங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளிலிருந்தும் அவன் எவ்வாறு மீள்வான் என்பதுதான் "காதலால் கைது செய்"

காதலால் கைது செய்Where stories live. Discover now