சூரியன் தன் கதிர்களால் மேகங்களை அகற்றி விடியலுக்குத்தயாராகினான். அந்த விடியலின் அழகை பல வருடங்களுக்குப்பிறகு தன் பால்கனி வழியாக ரசித்துக்கொண்டிருந்தவள் வேறு யாருமில்லை நம் கதையின்நாயகி மாதுரியேதான்! எத்தனை வருடங்கள் கழித்து விடியலை ரசிக்கிறாள்….6 ஆண்டுகள் ஆமாம் 6 ஆண்டுகள் ஓடிவிட்டன. தூக்கம் தவிர்த்து கடுமையாக உழைத்த 6 ஆண்டுகள். இந்த விடியலுக்காக எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறாள், வெறிபிடித்தாற்போல் இவள் வேலை வேலை என்று ஓடுவதைக்கண்டு வள்ளியம்மா மட்டும் அதட்டி உருட்டி உண்ண வைக்காவிடில் இவள் கதி என்னவாகியிருக்கும் மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் ஓடியவலுக்கு உணவுண்ண மட்டும் எங்கிருந்து நேரம் கிடைத்திருக்கும் அல்லது தோன்றியிருக்கும் இரவும் பகலும் கணினி முன்னும் கோப்புகளோடும் அலைந்தவளுக்கு இயற்கையை ரசிக்க நேரமேது?
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து சமையலறைக்குள் வந்த வள்ளியம்மா என்று மாதுரியால் அழைக்கப்படும் வள்ளியின் மனதில் இருந்ததெல்லாம் மாதுரியின் முகத்தில் சிரிப்பை காணவேண்டும் என்கிற ஆசை மட்டுமே. வழமைப்போல் காபியை தயாரித்து மாதுரிக்காக எடுத்துச்செல்ல எத்தனித்தவளுக்கு ஆச்சர்யம் என்னவென்றால் மாதுரி இளஞ்சிரிப்புடன் மாடியிலிருந்து இறங்கி வந்தது. எப்பொழுதும் தன்னைப்பார்த்து முறுவலிப்பாள்தான் ஆனால் அதில் உற்சாகம் இருந்ததில்லை ஆனால் இன்று சிரிக்கிறாள் இந்தச்சிரிப்பில் எதையோ சாதித்த உற்சாகம் தெரிகிறதே என்று வள்ளியம்மா சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் பொழுதே மாதுரி அவளை நெருங்கிவிட்டாள்.
‘வள்ளியம்மா காபி மக்கை என்கிட்ட கொடுங்கள் நான் தோட்டத்துக்குப்போய் காலாற நடந்திட்டு வரேன்’ என்று மக்கை வாங்கிக்கொண்டு துள்ளளுடன் நடந்துச்சென்ற மாதுரியை பார்க்கையில் இது நிலைக்க வேண்டும் கடவுளே என்றுதான் வள்ளியின் மனம் பிரார்த்தித்தது….
காபி மக்குடன் தோட்டத்துக்கு வந்த மாதுரிக்கு அந்த நாள் மறந்துவிடவில்லை
எப்படி மறக்க முடியும் சிறுவயதிலேயே அன்னையை இழந்த மாதுரி தொழிலதிபரான தனது தந்தையிடம்தான் வளர்ந்தாள். அவளது
தந்தை மட்டுமில்லாமல் அந்த வீட்டில் தோட்ட வேலை செய்யும் வேலனும் சமையல் வேலை செய்யும் வள்ளியும்கூட
அவளை செல்லப்பிள்ளையாகத்தான் வளர்த்தார்கள். இப்படி செல்லமாக வளர்ந்த மாதுரிக்கு திடிரென்று ஒருநாள் தந்தை மாரடைப்பில் இறந்துவிட அதன் காரணம் தொழில் நஷ்டம் என்று தெரிந்ததும் உறவுகளும் பொறுப்பேற்க மனமற்று ஒதுங்கிவிட்டார்கள். 19 வயதேயான மாதுரி ஒன்றும் புரியாமல்
நிற்கையில் அவளுக்கு உதவிக்கரம் நீட்டியது அவளது தந்தையின் நண்பர் சுதாகரன் மட்டுமே. சுதாகரன் அவளிடம் தந்தையின் தொழிலை தொடர சொன்னப்போது தன்னால் முடியுமா என்று சந்தேகத்தில் இருந்தவளுக்கு பக்கப்பலமாக நின்றது வேலனும் வள்ளியுமே.
19 வயதேயான மாதுரிக்கு தொழில் நுணுக்கத்தை கற்பித்து இந்த 6 ஆண்டுகளில் அவளை இளம்தொழிலதிபராக்கிய பெருமை மாதுரியுடைய சுதாகரன் அங்கிளுக்கேச்சேரும்.
மாதுரி மட்டும் சும்மாவா என்ன? தன் தந்தையின் பெயரை காப்பாற்றவும் தன்மேல் வைத்த நம்பிக்கையை காக்கவும் கடுமையாக உழைத்திருக்கிறாளே! ஆனால் அந்த சந்திப்பு…. அன்று அது நடந்திருக்காவிடில் யோசித்துப்பார்க்கவே தலைச்சுற்றியது அவளுக்கு.
யாரோ தன்னை சத்தமாக அழைப்பதுப்போல் ஓர் உணர்வு திரும்பிப்பார்த்தால் வள்ளியம்மாதான்!
YOU ARE READING
ப்ரியசகியே!(Completed)
Fanfictionநம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை