சகி-18

2.1K 74 2
                                    

                          



அவள் சென்றிருந்தது தொழில்முறை பயணம் அந்த வகையில் சென்ற காரியம் ஜெயமே ஆனால் அவள்தான் அந்த வெற்றியைக்கொண்டாடும் மனநிலையில் இல்லையே விமான நிலையத்தில் வந்திறங்கியதுமே கிருஷ்ணாவை எதிர்ப்பார்த்தவளுக்கு வந்திருந்த ட்ரைவரைக்காணவும் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது  அவனிடம் பேசி இரண்டு நாளாகிறது.

காரோட்டியும் அமைதியாகவே வர இவள் கேட்ட கேள்விகளுக்கும் ஆம் இல்லை என்ற பதிலைத்தவிர வேறேதும் இல்லாமல் போகவே அவளும் மௌனமாகிவிட்டாள்.

வழக்கத்தைப்போல வண்டியிலிருந்து இறங்கி  ஔட் ஹவுஸ் நோக்கிச்சென்ற மாதுவைக்காண அவருக்கு பரிதாபமாக இருந்தது அவரும் சொல்லிவிட வேண்டுமென்றுதான் நினைத்தார் ஆனால் பாவம் அவள் நிற்கவுமில்லை அவரால் முடியவுமில்லை.

எப்பொழுதும் திறந்தே கிடக்கும் கதவு மூடியிருக்க காலிங் பெல்லை அழுத்தியவள் அதன் பின்பே கதவு பூட்டப்பட்டிருப்பதை கவனித்தாள். எங்கே போயிருப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர எப்பொழுதும்போல் முதல் ஆளாக வந்து நிற்கும் வள்ளியம்மாவை காணவில்லை இவள் ‘வள்ளியம்மா’ என்றழைத்த பின்னே அடுக்களையிலிருந்து வெளிபட்டவர் முகமே சொல்லியது அவர் அழுதிருக்கிறாரென்று. ஏதோ ஒன்று சரியில்லை என்பதை உணர்ந்தவள்

‘என்னாச்சுமா???....ஏன் கண்ணு கலங்கியிருக்கு? சுந்துமா எங்க? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?’ அவள் கேள்விகளை அடுக்க அவரால்  அதற்குமேல் முடியாதென்பதுபோல் அழுதுவிட்டார்.

‘என்னாச்சுமா???... சொல்லுங்கமா’

‘சுந்தரிக்காவும் கிருஷ்ணாவும்….’

‘கிருஷ்ணாவும்…?’

‘ வீட்ட விட்டு போய்ட்டாங்கடா...நம்மளவிட்டுட்டு இந்த வீட்ட விட்டு போய்ட்டாங்க கண்ணு’ என அவள் பிரம்மை பிடித்ததைப்போலாகிவிட்டாள். அவள் இப்படியொன்றை எதிர்ப்பார்க்கவில்லையே...அவள் திகைத்தது சில நிமிடங்களே சுந்தரி அவள்மேல் வைத்திருந்த அன்பை உணர்ந்திருந்தவளுக்கு அவர் அப்படி விட்டுச்செல்ல வேண்டுமென்றால் ஏதோ நடந்திருக்கவேண்டும் என்று நிச்சயம்.

ப்ரியசகியே!(Completed)Where stories live. Discover now