தன்னை நோக்கி அரக்க பரக்க ஓடிவரும் வள்ளியம்மாவை கண்டுதான் மாதுரி நிகழ்காலத்திற்கு வந்தாள். அப்பொழுதுதான் காபி மக்கோடு காலாற நடக்கிறேன் பேர்வழி என்று வந்தவள் பழைய நினைவுகளில் அங்கிருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டது புரிந்தது.
‘ரொம்ப நேரமாயிடுச்சோ’ என்று கை கடிகாரத்தை பார்த்தாள் அது ‘நீ வந்து நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன’ என்று கண் சிமிட்டியது. காபி கோப்பையை பார்த்தால் அதுவோ ‘நீ என்னை கண்டுக்கவே இல்லை’ என்று முறைத்தது. வலது கை வாட்சையும் இடது கையில் இருந்த கப்பையும் பார்த்தவளுக்கோ குற்ற உணர்வு தலை தூக்கியது அதை அதன் தலையிலேயே அடித்து அமுக்கிவிட்டாள் மாதுரி.
‘இல்லை எனக்காக வள்ளியம்மா போட்ட காபியை வீணாக்ககூடாது’ என்று ஒரே மடக்கில் கப்பை காலியாக்கிவிட்டாள்.
அதற்குள் வள்ளியம்மா அவளை நெருங்கிவிட்டாள் ‘என்னாச்சுமா? ஏன் இவ்வளவு வேகமா வரீங்க?’
‘இல்ல கண்ணு ரொம்ப நேரமாச்சா அதுமட்டுமில்லாம உன் போன் வேற அடிச்சுக்கிட்டே இருந்ததுமா ஏதாவது முக்கியமான விஷயமாயிருந்துச்சுன்னா அதான் எடுத்துட்டு வந்தேன் இருந்தும் கட்டாயிடுச்சு’ என்று சொன்னவரின் முகத்தில் அத்தனை வருத்தம்.
‘சாரிமா ஏதோ யோசனைல ரொம்ப நேரம் உட்கார்ந்திட்டேன் சாரிமா’
‘ஐய்யோ! ஏம்மா சாரிலாம் கேக்கறே நான் கட்டாயிடுச்சே ஏதாவது முக்கியமான விஷயமாயிருந்தா என்ன பன்றதுன்னு நினைச்சேன்மா’
‘அதனால என்னமா நானே கூப்பிட்டு கேட்டுக்கறேன்’ ஆறுதல் படுத்தினாள் சிரியவள். பெரியவளின் தோளில் கைப்போட்டு அனைத்தவாறே அவரின் உயரத்திற்கு ஏற்றாற்போல் லேசாக குனிந்தபடி எதையோ சுவாரஸ்யமாக பேசியபடி செல்லும் மாதுரியைக்கண்ட வேலனின் கண்கள் பனித்தது. அவர் பார்த்து வளர்ந்த பெண்ணல்லவா மாதுரி.இன்றோ அவரே அன்னாந்து பார்க்கும் அளவு வளர்ந்துவிட்டாள். அதுவும் அவளின் உயரம் அவளுக்கு தனி கம்பீரத்தை கொடுத்ததென்றால் அவளின் பண்பும் அறிவும் அவளை இன்னும் உயர்த்தியது.
இதெல்லாம் பார்க்க அய்யாக்கு கொடுத்து வைக்கலயே என்று ஓர் பெருமூச்சால் அந்த இடத்தை நிரப்பிவிட்டு சென்றார் வேலன்.
வள்ளியம்மாவுடன் பேசிவிட்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தாள் மாது. அந்த விடியலே அவளுக்கு அவ்வளவு அழகாக தெரிந்தது. நிற்பதற்குக்கூட நேரமில்லாமல் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்த அந்த காலை நேரத்திலும் அவள் மனம்
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும் என்று பாடிக்கொண்டிருந்தது. நேற்றுவரை அவளும் ஓடியவள்தானே, இன்று ரசிக்கிறாள் ஆனால் நம்மில் பலர் ஓடிக்கொண்டு மட்டுமே இருக்கிறோமே தவிர ரசிப்பதில்லை காரணங்கள் பல…. ஆனால் வாழ்க்கை ஒன்றுதான்…..
YOU ARE READING
ப்ரியசகியே!(Completed)
Fanfictionநம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை