சகி-12

2.6K 80 0
                                    

                         


ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்….’ மோடில் இருந்த கிருஷ்ணாவிற்கு எல்லாமே அழகாகத்தான் தெரிந்தது. மதிய வேலையில் அந்த சுட்டெரிக்கும் சூர்யனில் கூட சில்லென்று ஒரு காதல் படம் பார்த்த ஃபீலில் இருந்தான்.

அவனது சுபாவமே அதுதான் எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பான் மற்றவர்களையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான். இப்படிபட்ட கிருஷ்ணாவின் இன்றைய குதுகலத்திற்கான காரணம் அவனது MCom  தேர்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்திருந்தது இனி ரிசல்ட் மட்டும்தான் பாக்கி. ஆனால் அவனுக்குதான் நன்றாக தெரியுமே எப்படி எழுதியிருக்கிறானென்று, எந்தளவு கலகலப்பானவனோ அந்த அளவு படிப்பாளியும்கூட. அதானால்தானோ என்னவோ அடுத்து என்ன என்ற கவலை கொஞ்சமும் இல்லாமல் ‘ ஃப்ரெண்ட பார்த்துட்டு வரேன்மா’ என்று கிளம்பிவிட்டவன் அவன் வீட்டில் இல்லை என்று தெரிந்தவுடன் பொறுமையாக வீடு திரும்பிகிறேன் பேர்வழி என்று ஊர் சுற்றிக்கொண்டிருந்தான்.

அப்படி அவன் வந்துக்கொண்டிருக்கும்பொழுதுதான்,

அதிக ஆள்நடமாட்டமில்லாத அந்த ரோட்டில் ஒரு கார் தாறுமாறாக வந்துக்கொண்டிருப்பதை பார்த்தான்.

அந்த புளிய மரத்தில் மோதிவிடும் என்றுதான் நினைத்தான் அதற்கேற்றார்போல் வண்டியும் இடிப்பதுப்போல் வந்து நின்றிருந்தது.

‘ அந்த ட்ரைவருக்கு என்ன புளியங்கா னா அவ்வளவு இஷ்டமா என்ன மரத்துமேலயே வண்டிய விடுறான்’ என்று பார்த்துக்கொண்டிருந்தவன் உள்ளிருந்து இறங்கிய பெண்ணை பார்த்துவிட்டு

‘ ஓ...விடுறான் இல்ல விடுறாள்’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டிருக்க அவள் இறங்கிய விதமும் அதன்பின் கொஞ்சம்கூட நிற்காமல் நடந்துச்சென்றது எல்லாம் வித்தியாசமாகப்பட்டது ஏதோ சரியில்லை என்றுணர்ந்தவன் சிறிதும் யோசியாமல் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அவளை பின்தொடர்ந்தான்.

ப்ரியசகியே!(Completed)Where stories live. Discover now