அதிகாலையில் விழித்த கிருஷ்ணாவிற்கு அவ்வீட்டின் அமைதியே அவனை யோசனையில் ஆழ்த்தியது பொதுவாக அதிகாலையில் அவனை எழுப்பும் சுப்ரபாதமும், பஜகோவிந்தமும் இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் ஒளிப்பதில்லை. காலில் சக்கரத்தை கட்டியதுப்போல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் தாயாரின் சுறுசுறுப்பு எங்கே போனது….இதற்கு காரணம் வயதின் தாக்கமா இல்லை மனச்சோர்வா என்று மூலையை கசக்கியவனுக்கு கிட்டிய பதிலோ அவனை சோர்வடையச்செய்தது.
ஆனாலும்….என்று மனம் சென்ற திசையை பார்த்து தலையை உலுக்கிக்கொண்டு எழுந்துவிட்டான். நேரத்தை பார்த்தால் அதுவோ 5:30 என்று காட்டியது எழுந்துச்சென்று அம்மாவை பார்த்தால் அவர் இன்னும் உறங்கிக்கொண்டிருந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அன்னையை எழுப்ப மனமில்லாது திரைச்சீலையை இழுத்து மூடிவிட்டு சமையலறையை நோக்கி நடந்தான்.
அவன் என்னதான் அம்மாவை எழுப்பிவிடக்கூடாதென கவனமாக இருந்தாலும் குக்கருக்கு அந்த பொறுமை இல்லைபோலும் விசிலடித்து சுந்தரியை எழுப்பிவிட்டது.
‘ச்சே இவ்வளவு செஞ்சும் குக்கர் மேலயிருந்த விசில மறந்துட்டோமே’ என்று வடிவேலு பானியில் வாய்விட்டே அலுத்துக்கொண்டான்.
எப்படியும் அவர் இங்கு வந்துவிடுவார் என்று இரண்டு காபி மக்கையும் எடுத்துக்கொண்டு அவன் திரும்பினால் அதற்குள் சுந்தரி வெளியே வந்துவிட்டார்.
ஒரு இளநகையை உதட்டில் தவழவிட்டபடி ‘குட் மார்னிங்மா’ என்று ஒரு காபி மக்கை அவரிடம் நீட்டினான்.
‘குட் மார்னிங் கண்ணா….என்னை எழுப்பியிருக்கலாமே’ என்று குறைப்பட்டுக்கொண்டே கப்பை வாங்கிக்கொண்டார் சுந்தரி.
‘ஏன்மா என் காபி என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு’.
‘இல்லையா பின்ன நீ குடுக்கற காபிக்கு உன் பேர்ல கேசே போடலாம்டா’ என்று சொல்லிக்கொண்டே அவர் காபியை ரசித்து ருசித்துக்கொண்டிருந்தார் அதை கவனித்துக்கொண்டிருந்தவனோ ‘ ஓ அப்போ நான் சமைச்சத என்ன பன்றதா உத்தேசம்?’என்று அவன் வினவ
‘ஏன்டா என் காபியிலதான் கைவச்சனா வரவர என் சாப்பாடுலயும் வீடு கட்டி விளையாட ஆரம்பிச்சிட்டியேடா’ என்று அவர் அலற அவனோ சிரித்துவிட்டான்.
அதற்குமேல் அவராலும் சிரிப்பை அடக்கமுடியவில்லை ஆனால் சுந்தரியின் சிரிப்பு அவர் கண்களை எட்டாததை கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவன் மனதில் இருந்ததெல்லாம் இதுமட்டுமே எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது மனதில் கிடக்கும் கவலைகளை புறந்தள்ளிவிட்டு மகனிற்காக கேலி பேசுகிறார் அவனை சிரிக்க வைக்கிறார்.
ஆனால் நியாயப்படி இதெல்லாம் அவனல்லவா செய்யவேண்டும். தன் அம்மாவின் மன உறுதியில் தனக்கு பாதியாவது இருக்குமா? என்றுதான் தோன்றியது.
ஆம் சுந்தரியின் மன உறுதி அசாத்யமானது இல்லையெனில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவர் உதட்டினில் இருக்கும் சிரிப்பு….அது எப்படி ஒருவரால் தன் கவலைகளையும் பொருட்படுத்தாது அடுத்தவர்களை சிரிக்க வைக்க இயலும் என்று யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு மின்னல் போல் அந்த முகம் மனக்கண்ணில் வந்துச்சென்றது. அதற்குள் சுந்தரி என்னமோ கேட்டுக்கொண்டிருக்க அவன் கவனத்தை அங்கே திருப்பினான்.
‘இன்டர்வியு என்னைக்குப்பா?’
‘நாளைக்கு காலைல பதினோரு மணிக்கும்மா’ என்றவன்
‘அம்மா நான் குளிச்சிட்டு வரேன் சாப்பிடலாம்’ என்று சென்ற மகனை காண அவருக்கு சங்கடமாக இருந்தது.
‘எப்படி இருந்த பையன் இன்னைக்கு இவ்வளோ அமைதியாகிட்டான், இவன் முன்னல்லாம் இந்த மாதிரி ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா இருப்பானா….இல்லை அவனாலதான் இருக்க முடியுமா….தகரடப்பால கல்லை போட்டு உருட்றமாதிரி பேசாதடா என்று நான் கூட அவனை எத்தனை முறை கேலி பேசிருக்கேன், எனக்கேத்தெறியாமல் அந்த கிருஷ்ணா எங்கே போனான்….எல்லா விஷயங்களிலும் டேக் இட் ஈசி மா என்று கடந்து செல்லும் கிருஷ்ணாவா இன்று இப்படி எல்லா விஷயத்துக்கும் இவ்வளவு யோசிக்கிறான்….’
ஆம் அது உண்மையே நம் வாழ்வில் நடக்கும் ஒருசில விரும்பத்தகாத சம்பவங்கள் நம் வாழ்வை மட்டுமின்றி நம்மையே மாற்றிவிடும்.அதிலிருந்து வெளி வருவது அவ்வளவு சுலபமில்லை ஆனால் சாத்தியமே.
அதன் பின் ஒரு சில கேலி பேச்சுக்களுடன் காலை உணவை முடித்துக்கொண்டனர் அந்த தாயும் மகனும்.
YOU ARE READING
ப்ரியசகியே!(Completed)
Fanfictionநம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை