சுந்தரி
கிருஷ்ணா உள்ளே சென்ற இரண்டு நிமிடத்தில் அவனுடைய போன் பாடத்துவங்கியது. அவன் உள்ளிருந்தே குரல் கொடுத்தான்.
‘அம்மா யாருன்னு பாரேன்’
‘ஒரு நிமிஷம்’ என்று போனை எடுத்து பார்த்தால் அதில் அவருடைய எண்ணில் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது. அது அவர் வருவதற்குள் கட்டாகியிருந்தது.சரி நாமே அழைக்கலாம் என்று அவர் நினைக்கயிலேயே அடுத்த அழைப்பு, இந்த முறை எடுத்துவிட்டார்.
‘ஹலோ...மிஸ்டர்.கிருஷ்ணாவா?’
‘மாதுரி!!! நான் சுந்தரி பேசறேன்மா,எப்படி இருக்க? சாப்டாச்சா? வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?இது எப்படிமா உன் கைக்கு வந்தது?’ என்று அவர் கேள்விகளை அடுக்க, கேட்டுக்கொண்டிருந்த அவளுக்கே மூச்சு வாங்கியது.
‘ச்சில் ச்சில்...இப்படியா மூச்சுவிடாம கேப்பாங்க முதல்ல கொஞ்சம் தண்ணி குடிங்கமா...அப்புறம் நான் சொல்றேன்’ என்க அவரும் சிறு பிள்ளை போல் தண்ணீரை குடித்து விட்டு கவனிக்க தொடங்கினார்.
‘நான் நல்லா இருக்கேன்மா,நியாயபடி நான் தான் இந்தக்கேள்விய கேட்கனும், நீங்க எப்படி இருக்கீங்கமா இப்போ?’
‘எனக்கு இப்போ ஒன்னும் இல்லை நான் நல்லா இருக்கேன். நீ சாப்பிட்டாச்சா?’
‘ம்ம்..சாப்டேனே. நீங்க?’
‘இனிமேதான் சாப்பிடனும் கிருஷ்ணாக்காக வெய்ட்டிங் குளிக்கப்போயிருக்கான்’
‘சீக்கிரமா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட்டெடுங்கம்மா’
‘ம்ம்...சரி நீ சொல்லு இது எப்படி உன் கையில கிடைச்சுது?’
‘அது உங்கள கூட்டிட்டு வரும்போது நான்தான் பின் சீட்ல எல்லாத்தையும் போட்டேன் ஆனா போன மட்டும் எடுத்து குடுக்க மறந்துட்டேன் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபைல எடுக்க போனப்போதுதான் பார்த்தேன். சார்ஜ் இல்லாம இருந்தது , சார்ஜ் பண்ணி பார்த்தா இந்த நம்பர்ல இருந்து அவ்ளோ கால்ஸ் அதான் கூப்பிட்டேன்’ என்ற அவளது நீண்ட விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தவர் அவர் பங்கிற்கு நலம் விசாரிக்க ஆரம்பித்தார், இவர்களின் பேச்சு இப்படியே நீண்டுக்கொண்டே போக அவர் கிருஷ்ணா வெளியே வந்ததையும் கவனிக்கவில்லை, திரும்பி லாப்டாப்பும் கையுமாக உள்ளறைக்கு சென்றதையும் கவனிக்கவில்லை...கடைசியில் வால் க்ளாக்கிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குருவி மட்டும் கத்தி ஒன்பது மணியாகிவிட்டது என்று சொல்லவில்லையென்றால் அவர்கள் நிறுத்தியிருப்பார்களா என்பது சந்தேகமே.
YOU ARE READING
ப்ரியசகியே!(Completed)
Fanfictionநம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை