மாதுரி கவலைகளை வெளிக்காட்டிக்கொள்ளும் ரகமில்லையென்றாலும் அவளது மௌனமும் இந்த யோசனையில் தோய்ந்த முகமும் வள்ளியை கவலைக்குள்ளாக்கியது.
அன்று சந்திரசேகரின் வீட்டிலிருந்து திரும்பியதிலிருந்தே இப்படித் தானிருக்கிறாள் அவளது எண்ணவோட்டத்தை கணிக்க அவரால் இயலவில்லை...சாப்பாட்டைத் தவிர வேறெந்த விஷயத்திலும் அவளை கட்டாயப்படுத்தியதில்லை அவளும் அப்படியொரு சந்தர்ப்பத்தை அவருக்கு அளித்ததில்லை...காரணம் அவளிடமிருந்த தெளிவு...ஒவ்வொரு காரியத்தையும் அடியாழம்வரை ஆராய்ந்து செயல்படும் திறன்...ஒரு பக்கம் மாதுவிற்காக வருந்தினாரென்றால் மறுபக்கம் தன்னை உடன் பிறவா சகோதரியை போல் அன்பு செலுத்திய சுந்தரியை எண்ணி கலக்கமடைந்தார்.
அன்பு அத்தகையது...இதில் உண்மையான அன்பு பொய்யான அன்பு என்று பிரிக்கவோ இல்லை அன்புக்கு அளவுகோள் வைக்கவோ இயலாது...சுந்தரியும் அதையேத்தான் செய்தார் அன்பு செலுத்துவதில் என்ன கஞ்சத்தனம் என்று அவர் அன்பு மழையை பொழிந்தார்...அதன் விளைவு இன்று அவரில்லாத வீட்டில் எல்லோரும் மழைக்காக காத்திருக்கும் பூமியைப் போலானர்.
இரண்டு நாட்கள் ஓடிவிட்டது…
அன்று காலையிலேயே கிளம்பி டைனிங் டேபிளிற்கு வந்த மாதுரியின் முகத்தையே பார்த்துக்கொண்டு பரிமாறிய வள்ளியால் ஒன்றும் கணிக்க முடியவில்லை காரணம் அவளது உணர்ச்சியற்ற முகம்...வள்ளியம்மா தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தாலும் தட்டிலேயே பார்வையை பதித்து உண்டு கிளம்பிவிட்டாள்.. அவளிடம் இப்பொழுது கேள்விகள் மட்டுமே...பதிலுக்காக காத்திருந்தாள்...அவள் தேடிய பதிலும் கிடைத்தது ஆனால் வேறுவிதமாக.
நான்கு நாட்களாக வேலை பழு காரணமாக மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தாள் சிந்து. மாதுரி ஊரிலிருந்து வந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டன இருந்தும் அவளிடம் சகஜமாகப் பேச நேரம் கிட்டவில்லை.கிருஷ்ணாவோ அலுவலகத்திற்கு வரவேயில்லை அவனுக்கு அழைத்துப் பார்த்தால் அதுவோ ஸ்விச்ட் ஆஃப் என்றது சரி அவன் வீட்டிற்குச் செல்லலாமென்றால் அவள் வேதாவிலிருந்து கிளம்பவே மணி 7:30க்கு மேலாகி விடுகிறது காலையிலோ அந்த வாகன நெரிசலில் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு வருவதே பெரும்பாடாகயிருந்தது அவளுக்கு. இன்றும் அவள் முன்னிருந்த டேட்டாவிற்குள் மூழ்கியிருந்தவள் அங்கு மற்றவர்களிடையே இருந்த சலசலப்பை கவனிக்கவில்லை அந்த மணிதர் அவள் முன் வந்து நின்று ‘மிஸ்.சிந்து வாசுதேவ்’என்று அதிகாரத்வனியில் அவள் கவனத்தை கலைக்கும்வரை. தலையை நிமிர்த்தியவளுக்கோ வந்தவர் யாரென்று கிரஹித்துக்கொள்ளவே சில நொடிகள் தேவைப்பட்டது.
YOU ARE READING
ப்ரியசகியே!(Completed)
Fanfictionநம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை