சகி-11

2.7K 81 0
                                    

                        


ஆறு வருடங்களுக்கு முன்…

அந்த அறை முழுக்க இருள் சூழ்ந்திருந்தது

கதவை அடைத்து திரைச்சீலைகளையெல்லாம் இழுத்து மூடப்பட்டிருந்தது. கட்டிலுக்கு அருகே தரையில் உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்தபடி சீலிங்கையே வெறித்துக்கொண்டிருந்தாள் மாதுரி. இன்னுமும் அவளால் அவள் தந்தை இறந்துவிட்டதை நம்ப முடியவில்லை.

  ஆம் அவர் இறந்து ஒரு வாரமாகிவிட்டது, அவளால்தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏதோ எல்லாவற்றையும் ஒரே நாளில் இழந்துவிட்டதுப்போல் இருந்தது. இனி என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை. கடன் சுமை வேறு. அவளால் எதுவும் யோசிக்கவே முடியவில்லை அழவும் இஷ்டமில்லை.

சீலிங்கையே வெறித்துக்கொண்டிருந்தவளுக்கு யாரோ அறைக்கதவை கொஞ்சம் வேகமாக தட்டவும் தான் சுயநினைவுக்கு வந்தாள்.

‘யாரு ?’

‘மாதும்மா நான்தான்’ என்க

‘எனக்கு பசிக்கல மா, நான் அப்புறமா சாப்பிடறேன்’ என

‘ மாதும்மா சுதாகரன் அண்ணா வந்திருக்காரு உன்கிட்ட பேசனுமாம்’

‘ரெண்டு நிமிஷம்மா நான் வந்திட்டேன்’ என்று  முகம் துடைத்துக்கொண்டு கீழே சென்றாள்.

‘ ஹாய் அங்கிள், ஆன்டி எப்படியிருக்காங்க சத்யா எப்படியிருக்கா?’ என்று கேட்டுக்கொண்டே கீழிறங்கி வந்த மாதுரியை பார்க்க அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவருக்கு தெரியும் இதுதான் மாதுரி அவள் எவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்தாலும் அது மற்றவர்களை பாதிக்காத அளவு பார்த்துக்கொள்வாள் எதையும் காட்டிக்கொள்ளாத ரகம்.

‘ எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா, நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனுமே’ என்க

அவளும் ‘வாங்க அங்கிள்’ என்று ஆஃபிஸ் ரூமிற்கு  அழைத்துச்சென்றுவிட்டாள்.

   

 அவர் சொல்வதையெல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவள்

ப்ரியசகியே!(Completed)Where stories live. Discover now