சகி-20
அன்று காலை வழக்கத்தைவிட மிகவும் தாமதமாக எழுந்து கீழே வந்தவள்
‘வள்ளியம்மா காஃபி!’ என்று விட்டு அங்கிருந்த சேரில் உட்கார்ந்து தலையை கைகளால் தாங்கிக்கொள்ள காஃபி மக்குடன் வந்த வள்ளியோ அவளை பார்த்துவிட்டு
‘என்னாச்சுமா...தலை வலிக்குதா?’என்று தலையை தொட்டுப் பார்க்க
‘லைட்டா மா’
‘நைட் லேட்டா தூங்கினியாமா?’
‘இல்லமா நான் வந்தவுடனே தூங்கிட்டேன்’
‘நீ வரும்போதே மணி 12டா’என்க அவளோ பதிலேதும் சொல்லாது பார்வையை அந்த ஃப்ரெஞ்ச் வின்டோ வழியாக வெளியே செலுத்த வள்ளி அவளது தோளை பற்றி ‘என்னாச்சுமா?’ என அவள் பார்வையை அகற்றாது
‘ஒன்னுமில்ல மா ஒரு முக்கியமான வேலை…’என்க அவள் தலையை தடவிக் கொடுத்து
‘எல்லாம் சரியாகிடும்டா’என அவளோ ஆகிடுமாம்மா? என்ற பார்வை பார்க்க அவளது தோள்களை லேசாக அணைத்துவிட்டு சென்றுவிட்டார்.
அங்கிருந்த செய்தித்தாளை கையிலெடுத்து பின் வேண்டாமென்று டேபிளில் போட்டவள் ஏதோ ஒன்று அவள் கவனத்தை ஈர்க்க மறுபடியும் அதை எடுத்துப் பார்த்தாள்.
அதை வாசித்தவளுக்கோ கோபம் தாறுமாறாக ஏற ‘இடியட்’என்று கத்தியவாறு காஃபி மக்கை ‘டப்’என்ற சத்ததுடன் டீபாய்யில் வைத்தவள் அப்படியே எழுந்து கார் சாவியையும் அந்த செய்தித்தாளையும் எடுத்துக்கொண்டு வண்டியை நோக்கிச் செல்ல வள்ளியின் குரல் அவள் காதில் விழவேயில்லை…
வண்டியிலேறியவளோ இலக்கையடையும் வரை ‘ இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்’என்று புலம்பிக் கொண்டே வர அதற்குள் வரவேண்டிய இடமும் வந்திருந்தது.
காரிலிருந்து இறங்கியவள் காலிங் பெல்லை அடிக்கும் பொறுமைகூட {இல்லாமல் கதவை வேகமாக தட்டிவிட்டு கொஞ்சமும் பொறுமையில்லாமல் மறுபடியும் தட்ட எத்தனிக்கும்போதே கதவை திறந்திருந்தார் ரஞ்சனி…
YOU ARE READING
ப்ரியசகியே!(Completed)
Fanfictionநம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை