சகி-13

2.5K 81 0
                                    

                         




கிருஷ்ணா

கட்டிலில் உட்கார்ந்து தான் பேசி முடிக்கும் வரை தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த தாயை பார்க்க அவரோ இன்னமும் அவனைதான் பார்த்துக்கொண்டிருந்தார்.

உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவன் பேசி முடித்த பின்பே அவரிடம் அந்த வித்தியாசத்தை உணர்ந்தான்.

‘அம்மா…’ என்க அவரோ

‘என்கிட்ட இத சொல்லனும்னு உனக்கு தோணவேயில்லல’

‘அப்படியில்லம்மா இத அன்னைக்கே சொல்லனும்னு தான் நினைச்சேன் ஆனா நாம எதிர்பார்க்காத நிறைய விஷயம் நடந்திடுச்சு…’என அவருக்குமே பழையது எதுவும் நினைத்து பார்க்ககூட விருப்பமில்லை

‘சரி விடு...அந்த பொண்ணு பேரென்ன சொன்னே? நீ  சொல்றத வச்சு பார்த்தா ரொம்ப பொறுப்பானவளா இருப்பா போலையே’

‘ஆமாம் மா தன்ன சுத்தி  இருக்கவங்க கஷ்டப்படக்கூடதுன்னு அப்பவே நினைச்சவ மா’ என்றவன்

‘ஆனா அவ பேர நான் சொல்லமாட்டேனே...வேணும்னா நீயே கேட்டு தெரிஞ்சிக்கோ’என்க

‘அதுக்கென்ன எனக்கு கால் பண்ணிக்குடு நானே கேட்டுக்கறேன்’

அவனும் முயன்று பார்த்தான் ஆனால் அவள் மீட்டிங்கில் இருக்கிறாள் என்ற தகவல் மட்டுமே கிடைத்தது.

‘அவ மீட்டிங்கல இருக்காளாமா’

‘ஓ… ஆனா அவளுக்கு நேரமிருந்தா வீட்டுக்கு கூப்டிட்டு வாயேன்….நீ குடுத்த பில்டப்புல அவள பார்க்கனும்போல இருக்கு’ என்க அவனும் சரியென்றுவிட்டான்.

‘பாரு பேசிக்கிட்டே இருந்ததில நேரம் போனதே தெரியல...நான் கடைக்கு போய்ட்டு வரேன்’

‘என்ன வாங்கனும்?’

‘வெல்லம் தீரப்போகுது இப்பவே வாங்கிட்டோம்னா அப்புறம் அலைய வேண்டாம்’

‘நான் போய்ட்டு வரேன்’

‘நானே போய்ட்டு வரேன் இந்த வெதருக்கு கொஞ்சம் நடந்துட்டு வரலாமான்னு பார்க்கறேன்’

ப்ரியசகியே!(Completed)Where stories live. Discover now