சகி-4

3.8K 110 4
                                    






பூ பூக்கும் ஓசை

அதை கேட்கத்தான் ஆசை என்று பாடல் ஓடிக்கொண்டிருக்க அந்த கருப்பு நிறக்காரோ ரோட்டில் பறந்துக்கொண்டிருந்தது. அதை ஓட்டிக்கொண்டிருந்தவளின் முகமோ அந்த பாட்டிற்கு நேரெதிராக இருந்தது.

பூ என்ன பூகம்பமே வந்தாலும் அவளிருக்கும் மனநிலையில் அதை உணர்வாளா என்பது சந்தேகமே. முதலில் வருத்தமாக ஆரம்பித்தது இப்போது கோபத்தின் உச்சக்கட்டமாக உருமாறியிருந்தது. காலையில் அத்தனை சந்தோஷமாக ஆரம்பித்த நாளில் இவ்வளவு சிக்கல்களை சத்தியமாக மாதுரி கற்பனைக்கூட செய்திருக்க மாட்டாள். காலையில் வள்ளியம்மா கொண்டு வந்து கொடுத்த மொபைலில் மிஸ்ட் கால் ஆகிருந்த எண்களுக்கு அழைத்தவளுக்கோ கிடைத்த செய்தி அவ்வளவு வருத்தத்தை கொடுத்தது.

அலுவலகத்துக்கு வந்தவளுக்கோ ஒன்றும் ஓடவில்லை 'இது சரிபட்டு வராது' என்று முடிவெடுத்தவள் சிந்துவை அழைத்து ஒரு சில முக்கிய பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்துவிட்டு 'முக்கியமான வேலை வந்துவிட்டது சிந்து நான் போயே ஆகனும்' என்று கிளம்பிவிட்டாள். சிந்துவும் மாதுவும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அவள் சிந்துவை நன்கறிவாள் அதனால்தானோ என்னவோ ஆபிசை பற்றிய கவலையின்றி கைகளில் கார் பறந்துக்கொண்டிருந்தது.

வேதவள்ளி-ராஜசேகர் தம்பதியரின் ஒரே மகள் அதுவும் செல்ல மகள்தான் மாதுரி, அன்னையின் மறைவிற்குப்பிறகு தந்தையின் செல்லம் அதிகமானதே தவிர குறைந்ததில்லை. அதற்காக அவள் பொறுப்பற்றவள் என்று யாராலும் சொல்லிவிட முடியாது. பொறுப்பில்லாதவளால் தொழிலில் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியாது, ஆனால் அப்படிப்பட்டவள் இன்று அவளுடைய பொறுப்பை மற்றவளிடம் விட்டுவிட்டு வந்திருக்கிறாளென்றால்....என்று யோசிக்க யோசிக்க அவளுக்கு கோபம் தான் பொத்துக்கொண்டு வந்தது.

'இதெல்லாம் அவனால் வந்தது மனசில பெரிய இவன்னு நினைப்பு' என்று எங்கோ இருக்கும் ஒருவனுக்கு வசவுப்பாடிக்கொண்டிருந்தாள்.

ப்ரியசகியே!(Completed)Where stories live. Discover now