கிராமத்து மணம் மாறா மஞ்சள் முகத்து சாமந்திப் பூ அவள்... தைரியத்திற்கு பஞ்சமில்லா பாவை அவள்... ஆனால், நகர்புற வழகத்திற்கு பழக்கமில்லா பழைமை மிகு பண்புடையவள்...பாவம் அவள் என்ன செய்வாள் இனி அனைத்தையும் கடக்க கற்றுக்கொள்ள வேண்டுமே...
ஓஓஓ மறந்துட்டேன் அவ கொஞ்சம் சுமார தான் படிப்பா பார்ப்போம் பாஸ் ஆயிடுவா...
பிளீஸ் அவளுக்காக நீங்க எல்லாம் கடவுள வேண்டிக்கோங்க... ஸாரிரி... பேர் சொல்ல மறந்துட்டேன் ஆமாங்க, அவள் தான் மஞ்சு (மஞ்சுளா)... அவள் ஓர் கிராமத்து மலர்...அடுத்தது, மல்லி மல்லி மதுர மல்லி மதுர மல்லி ஆமாங்கோ...
இவள் மணம் கமலும் மல்லிகை போன்றவள்.. குணமானவள் கொஞ்சம் புதிரானவள் கிராமத்தில் இருந்தாலும் நகர்புற வாழ்க்கைக்கு தன்னை தயாராக வைத்துள்ள புதுமை மிக்கவள்... ஆனால் மல்லிகை போல எளிதில் மன(ண)ம் வாடி போவாள் மற்றவர்களின் கடும் வார்த்தைகளுக்கு எளிதில் பலி ஆகும் அவள் மனம்.. படிப்புக்கு பஞ்சமில்லை நல்லாவே வரும் இவளுக்கு... திறமை மிக்கவள்... இது நம்ம சௌமியா வின் இன்ட்ரோதாங்க...
வாங்க அடுத்த மலர பார்கலாம்...
மெல்ல! மெல்ல எடுங்க ரோஜா விலும் முள் இருக்கும் மறந்துடாதீங்க ஓகே...
ரோஜா இதழ்கள் போல் அழகில் மென்மையானவள் மும்மலர்களில் இவள் ஓர் ஸ்டைலிஷ் தமிழச்சி...
ஆமாங்க இவள் நகர்புற வாழ்க்கையை வழக்கமாக கொண்டவள்...மூவரில் அழகு மிக்கவள்... அதே சமயத்தில் கொஞ்சம் சீக்கரெட் டாஸ்க் பண்ணும் கில்லாடி இவள்...ஆனால் சந்தேகம் எழாது யாருக்கும்...மாறாக, இவளை பாவம் என்று சொல்லும் கூட்டம் தான் அதிகம்...ரோஜா முள்ளும் குத்தும் மறந்து விட வேண்டாம்...அட இவள வில்லி ன்னு நினச்சுட்டிங்களா அந்த அளவுக்கு வொர்த்து இல்லங்க இவள்... படிப்புல கெட்டிக்காரி தான்... இவள் தான்,,,என்னம்மா கேட்ட இருமா சொல்றேன்... எல்லாரும் கதைய படிக்குறாங்க ஆமாம்மா படிக்குறாங்க... வெளிய வாம்மா விஷாலி...மும்மலர்களுக்கும் அறிமுகம் போதும்னு நினைக்குறேன்...மிச்சத்த கதையில பார்ப்போம் அறிமுகத்துலே அறுவை போட வேணாம்...என்ன நான் சொல்லரது சரிதானே....
இனி இந்த மூன்று மலர்களும் பள்ளி எனும் பூங்காவில் பூத்து குலுங்க காத்திருக்கு மறக்காம பார்த்து ரசிங்க அன்பான வாசகர்களே!
பின் குறிப்பு: பூங்காவில் நுழைய சிறுவர்களுக்கு ஒரு ஓட்டும்... பெரியவர்களுக்கு ஒரு ஓட்டும் ஓர் கமெண்டும் அன்பு கட்டணமாக வசூலிக்கபடும் என தாழ்மையுடன் தெரிவிக்கிறோம்... மனமிருந்தால் கட்டணம் செலுத்தலாம் கட்டாயமில்லை... பார்த்து செய்க...
ஆனால் மறக்காம படிங்க...மலரும்...🌼🌼🌼
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...