பாம்ம்ம்... பெருமூச்சு விட்டது அந்த அரசுப்பேருந்து...ஸ்கூல் ஸ்டாப்லா இறங்கிக்க வேகமா என கண்டக்டர் சத்தமிட பெட்டி படுக்கையுடன் ஒரு பெருங்கூட்டம் பேருந்தை காலி செய்தது... அந்த கூட்டத்தில் தட்டி தடுமாறி தன் பொருட்களை கையில் பிடித்து தன் அம்மா வையும், தாத்தா வையும் தேடினாள் சௌமியா...
ஒரு வழியாக அவர்களை கண்டாள் அம்மா நான் இங்கருக்கேன் இங்கிட்டு பாருங்க என அவர்கள் பார்வையை தன் பக்கம் திருப்பினாள்... அவர்கள் அந்த பள்ளியின் நுழைவுவாயில் முன் நின்று வாய்பிளந்தனர்...இதுதான்டி இந்த ஊர்ல பெரிய ஸ்கூலு இங்க தான் உன் தாத்தா படிச்சாரு இப்ப நீ படிக்க போற... ஆனா ஒரு விஷயத்த ஞாவுகம் வச்சுகடி பசங்க பொண்ணுங்க சேர்ந்து படிக்கிற ஸ்கூலு கொஞ்சம் ஜாக்கிரத நான் என்ன சொல்றேன்னு புரியுதா...அடியே உன்டதான் பேசுறேன் கேக்குதா அங்க என்ன வேடிக்க...அதெல்லாம் நான் பார்த்துகிறேன்மா யூ டோன்ட் வொரி.. வீட்டுல இருந்து இதே பாட்ட பாடுற போர் அடிக்குதுமா...ஏன்டி உங்க அப்பா என்ன நம்பி உன்ன விட்டுட்டு வெளிநாடு போயிருக்காரு உனக்கு நான் சொல்றது வேடிக்கையா இருக்கா... சரி ஓகே ஓகே வெளியவே நிக்கவா வந்தோம் வாங்க உள்ள போலாம் என தாயையும் தாத்தாவையும் அழைத்துக்கொண்டு பள்ளியினுள் நுழைந்தாள் சௌமியா...சர்ர்ர்க்...படக் படக் என கதவுகள் திறந்தன அந்த காரில்... தனது லக்கேஜுடன் கேஷுவலாக இறங்கினாள் காரை விட்டு பள்ளியின் நுழைவுவாயில் முன்... அவள் மெல்லிய புருவம் உயர்த்தி மேல்நோக்கினாள் விஷாலி... இந்த ஸ்கூல்ல எல்லா ஸ்பெஷலிட்டியும் இருக்குமா ஹாஸ்டெல் இருக்கு நல்ல கோச்சிங் இருக்கு என கூச்சலிட்ட தன் மாமா வை போதும் அன்கிள் ஸ்கூலுக்கு விளம்பரம் எடுக்காதிங்க என கலாய்த்து சிரித்தாள்... எப்டியோ என்ன ஹாஸ்டல்ல தள்ளிட்டிங்க இப்ப ஹேப்பியா என தன் அம்மாவையும் அப்பாவையும் ஓர் அசட்டுப் பார்வை பார்த்தாள் விஷாலி... இத பாரும இங்க பாய்ஸ் கேர்ல்ஸ் சேர்ந்து படிக்கிறாங்க அதனால கேர்புலா இருமா என விஷாலியின் தலையை கோதினார் அவள் தந்தை...எஸ் பா நான் பார்த்துகிறேன் வாங்க போலாம்...நால்வரும் உள்ளே நுழைந்தனர்...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...