நீயாயாயா!!!

254 20 17
                                    

அந்த நோட் என்னது தான் மஞ்சு...

விஷாலி திகைத்தாள்...
கார்த்திகா நீயா!!! இது உன் நோட்டுதானா என மஞ்சு கேட்க...

ஆமா மஞ்சு அது என் நோட்டுதான்...

சரி இந்தா பிடி வச்சுக்கோ தேங்க்ஸ்...
விஷாலி மஞ்சு இருவரும் வகுப்புக்கு சென்றனர்...

நேரம் ஓடியது... பள்ளி முடிந்தது...

விடுதியில்...
டே பாலு அந்த லெட்டர்ல உள்ளத யார் எழுதிருப்பா என ராஜு பாலுவிடம் கேட்க...
தெரியல மச்சான் ஆனா இப்போ அது பிரச்சன இல்லடா அதுல எழுதியிருந்தது எப்டி எல்லாருக்கும் தெரிஞ்சது...
அதான் மச்சான் எனக்கும் கொழப்பமா இருக்கு...

மறுபுறம்...
டே சூர்யா ஏன்டா இப்பலாம் ரொம்ப டல் ஆ இருக்க முன்னாடி மாதிரி நல்லா ஜாலியா இருடா...

எப்டி மச்சி ஜாலியா இருக்க அதான் அந்த சௌமி என்ன நல்லா அசிங்கப்படுத்திட்டாளே...

அடச்சீ இன்னும் அதே நினச்சுட்டு இருக்கியா அவள விடுடா மச்சான் அவளாம் ஒரு ஆளா உனக்குலாம் அவ வொர்த் இல்லடா...

அப்டி இல்ல மச்சான் அவ கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு அதான் இன்னும் அவள என்னால வெறுக்க முடில... அவ சொன்னத நினச்சு கஷ்டமா இருக்கு...

டே விடுடா மச்சான் அவள விட்டா உனக்கு இந்த ஸ்கூல்ல எவ்வளவோ நல்ல பொண்ணுங்க இருக்கு...

எதோ போடா நீதான் சொல்ற எனக்கு என்னமோ அவள தான் பிடிச்சுருக்கு...

லேடீஸ் ஹாஸ்டல்...
என்னடி விஷாலி ஏன் இப்டி உட்காந்துருக்க...

இல்ல சௌமி இன்னிக்கு என்ன நடந்துச்சுனா என நடந்தவற்றை கூறினாள் விஷாலி...

அப்புடியா வாடி இப்பவே போய் அந்த கார்த்திகாவ என்னானு கேட்டுட்டு வரலாம்...

இல்ல சௌமி எனக்கு ஒரே கொழப்பமா இருக்கு ...

என்னடி உனக்கு குழப்பம்...

அந்த லெட்டர்ல உள்ள எழுத்தும் அவ எழுத்தும் எப்டி ஒரே மாதிரி இருக்கு ... ஒருவேள அந்த லெட்டர அவ எழுதியிருந்தா அது எப்படி பாலு கொடுத்த நோட்ல இருக்கும்...

🌺மூன்று🌻 மலர்கள்🌸...Where stories live. Discover now