ஏன் ராஜு ???
ஏன் அப்டி செஞ்ச சொல்லு ஏன் மேல உனக்கு என்ன கோபம்???
சொல்லு மச்சான்... சொல்லுடா ராஜு... ஏன்டா...என்ன மன்னிச்சுடு பாலு... என்ன மன்னிச்சுடு கோபம் உன் மேல இல்லடா... என்னோட கோபம் எல்லாம் அந்த விஷாலி மேல தான்ட...
என்னடா சொல்ற அவ மேல உனக்கு என்னடா கோபம்...
சொல்றேன் பாலு...
எனக்கு ஒரு அண்ணன் இருக்கான் பாலு உனக்கு தெரியுமான்னு தெரில என்னோட பெரியம்மா பையன்...சரிடா அதுக்கு இப்ப என்னடா...
முழுசா கேட்டுட்டு பேசு பாலு...
எங்க அண்ணனும் இந்த ஸ்கூல்ல தான் படிக்கிறான்... 11th தமிழ் மீடியம் பயாலஜி குருப்...அப்டியா இதுவர நீ இத பத்தி சொல்லவே இல்ல... சரி அவனுக்கு இந்த பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்...
இருக்குடா அவன் பேரு அன்பு...
விஷாலிய ஒன்சைடா லவ் பண்ணான் அத போய் அவ கிட்டயும் சொன்னான் அதுக்கு அவ இவன நல்லா அசிங்கப்படுத்தி அனுப்பிட்டா...
அத நினச்சு நினச்சு அவன் தினமும் ரொம்ப பீல் பண்ணான்...
அவன இதுக்கு முன்னாடி நான் அப்டி பார்ததே இல்ல... அவன்ட நேர போய் பேசினேன் நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன் அந்த விஷாலி பலி வாங்குறதா அவனுக்கு நான் சத்தியம் பண்ணேன்...
அதேபோல அவள நான் அசிங்கபடுத்தினேன் அதுக்கு உன்னோட லவ்வ பகடகாயா யூஸ் பண்ணிக்கிட்டேன்...
நான் போட்ட பிளான் படியே எல்லாம் நல்லா போய்ட்டு இருந்துச்சு எப்படி சொதப்புனேன்னு தெரில... இல்லனா இன்னும் அவள நல்லா டார்ச்சர் பண்ணிருப்பேன்...
லவ் பிடிக்காதுன்னு எங்க அண்ணன்ட்ட சீன் போட்டவா உன்ட மட்டும் எப்டி நல்லா பழகலாம் சொல்லு அதான் அவ மேல எனக்கு இருந்த கோபத்த உன் மூலமா தீர்த்துக்கிட்டேன்...
நான் செஞ்சதுல என்ன பாலு தப்பு இருக்கு என் நிலமைல நீ இருந்தாலும் இத தான் செஞ்சுருப்ப...ச்சீ வாய மூடுடா...
டே மச்சான்...
அடச்சி இனி நீ அந்த வார்த்தைய கூப்பிட உனக்கு தகுதி இல்ல ராஜு ... என்ன சொன்ன நான் உன் இடத்துல இருந்தா அப்டிதா நடந்துருப்பேன்னு சொல்றியா... அதுக்கு நான் செத்துப்போயிருப்பேன் உன்ன மாதிரி ப்ரண்டுக்கு துரோகம் பண்ற துரோகியா இருக்கத விட சாகுறதே மேல்...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...