அந்தி சாயும் நேரம்... மாலைபொழுது மனதை வருடுகையில் மணியோசை நிரைந்தது பள்ளியில்... நாளை விடுமுறை என்ற நற்செய்தியுடன் கூடு செல்லும் பறவைகள் போல் அனைவரும் களைந்திட்ட நேரமது... பள்ளி அமைதிக்கடலானது...
விடுதியில்...
மஞ்சு நாளைக்கு அம்மா வராங்களாடி?
ஆமடி சௌமி... எங்க வீட்டுலயும் அம்மா வராங்கடி...
உனக்கு விஷாலி, எனக்கும் வராங்கடி... ஐ ஜாலி நாளைக்கு நம்ம மூனு பேர் வீட்டுலயும் பார்க்க ஆளு வராங்க... என மஞ்சு துள்ளினாள்...
இரவு உணவு முடித்துவிட்டு அனைவரது இமைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் திளைத்தது...அதிகாலை...
மஞ்சு எந்திரிடி... இரு சௌமி ரெண்டு நிமிஷத்துல போலாம் குளிக்க...
சரி விஷாலி நீ முன்னாடி போ நான் இந்த லூச இழுத்துட்டு வாரேன்...
பரவாயில்ல நானும் வெயிட் பண்றேன்...
மூவரும் குளித்துவிட்டு காலை உணவை உண்டுவிட்டு ஹாஸ்டல் வாயிலை உற்று நோக்கிய நேரம்...
மூவரின் வீட்டிலிருந்தும் அம்மாக்கள் அணிவகுக்க...
அம்மா எப்டி இருக்க ... நான் நல்லா இருக்கேன் புள்ள நீ ஏன் இளச்சுப்போயிட்ட..என மஞ்சு வின் அம்மா...
அம்மா நீ சொன்னமாரி நான் பஸ்ட் ரேங்க் போன எக்ஸாம்ல... சரி சந்தோஷம்டி இதேமாரி அடுத்த முறையும் வாங்கனும் என்று சௌமியின் அம்மா சந்தோஷப்பட...
அம்மா, அப்பா வரலயா, இல்லடி அடுத்து வரேல வரேன்னு சொன்னாரு... சரி மா என சலித்துகொண்ட விஷாலியை சமாதனம் செய்தார் அவள் அம்மா...மூவரின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவுகள் பகிர்ந்து பரிமாரப்பட்டது...
சௌமி அம்மா இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோங்க... இருக்கட்டும் போதும் மஞ்சு அம்மா...
விஷாலி அம்மா சிக்ஸ்டி பை சூப்பர்மா... என மஞ்சு அம்மா சொல்ல இன்னும் கொஞ்சம் போட்டுங்கங்க என மூவரின் வீட்டாரும் பிள்ளைகளோடு சேர்ந்து உண்டு கதைபேசி மகிழ்ந்தனர்... மாலை நேரம் விசிட்டர்ஸ் டைம் முடிய, மூவரின் அம்மாக்களும் இரவுக்காக டிப்பனில் சாப்பாடு கட்டி கொடுத்துவிட்டு.... நல்லா சாப்பிடுங்க புள்ளைகளா என ஆசை மனம் பாராட்டி வீடு திரும்பினர்...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...