அரையாண்டு

389 18 10
                                    

வகுப்புகள் வாசம் மாற பூக்கள் போல மணக்க... சௌமி மட்டும் வாடிய பூ போல் இருந்தால்... அதைக்கண்ட வனஜா, அவள் பக்கம் வந்து அமர்ந்தாள்...

ஹேய் என்ன சௌமி என்ன சோகமா இருக்க க்ளாஸ் நல்லா தானே போகுது... ஏன் இவ்ளோ டல்லா இருக்க என்னாச்சுடி...

அது ஒன்னும் இல்ல வனஜா லைட்டா தல வலிக்கறமாதிரி இருக்கு அதுதான்...

இல்லயே உன்னய பார்த்த தலவலில இருக்க மாதிரி தெரிலயே என்னாச்சு உண்மய சொல்லு...

அது வந்து என ஆரம்பித்த சௌமி அன்று காலை விடுதியில் நடந்த அனைத்தையும் விவரித்தாள்... இது தான்டி நடந்துச்சு அதான் யாரு என் பையில அந்த லெட்டர்ஸ போட்டுருப்பானு யோசிச்சுட்டு இருக்கேன்...

இதுதானா விஷயம்... சரி விடு அது யாருனு கண்டுபிடிச்சுடலாம்...

எப்புடி டி...

அதான் என்ட சொல்லிட்டில நான் பார்த்துக்கிறேன் யூ டோன்ட் வொரி... எப்பவும் போல ஜாலியா இரு...

சரிடி...

இன்ட்ரவல் பிரேக்...

மஞ்சு விஷாலி சௌமி மூவரும் கேன்டின் செல்கையில்...

ஹே சௌமி எப்டி டி அந்த லெட்டர்  உன் பையில வந்துச்சு என மஞ்சு பேச்சை துவக்க...

அதான்டி எனக்கும் தெரில... அப்படியே யாராவது லெட்டர் கொடுக்கனும்னு நினச்சுருந்தா நேராவே வந்து கொடுத்துருக்கலாம் அதுவும் இல்லேன்னா பையில போட்ருக்கலாம்... ஆனா இங்க எல்லாமே தலகீழா இருக்கே பல லெட்டர் வந்துருக்கு அதுவும் வேற வேற பேருங்கல்ல ஆனா எழுத்து மட்டும் ஒரேமாரி இருக்கு எப்டி... என சௌமி யோசிக்க...

ஒருவேள இப்டி இருக்குமோ என விஷாலி தன் சந்தேகத்தை துவக்கினாள்... யாரோ உன்ன மாட்டிவிடனும்னு நினச்சு பிளான் பண்ணி இப்படி பண்ணிருப்பாங்களோ...

இருக்கலாம் விஷாலி என சௌமி இழுக்க...

என்ன இருக்கலாம் அதான் நடந்துருக்கும்...

என்ன சொல்லற மஞ்சு...

ஆமாடி உன்ன பழி வாங்குவேன்னு அந்த சூரியா அன்னைக்கு சொன்னானே ஞாபகம் இருக்கா...

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 01, 2019 ⏰

Add this story to your Library to get notified about new parts!

🌺மூன்று🌻 மலர்கள்🌸...Where stories live. Discover now