👏👏👏... 👏👏👏... 👏👏👏...
கரலொலிகள் காதில் கானம்பாடியது அந்த அரங்கில்... முதல் போட்டியாளர் தனது அருமையான கருத்துகளை அரங்கில் நிரைத்துவிட்டு இருக்கை நோக்கி இடம்பெயர்ந்தார்...
நம்பர் 2... என நடுவர்கள் அழைக்க நடுக்கத்தை கட்டுப்படுத்தி கம்பீரத்தை கைகளில் ஏந்தியபடி கண்களில் ஓர் ஒளியோடு மேடை ஏறினாள் சௌமியா...
காந்தக்குரலில் தன் கருத்துகளை அனைவர் காதிலும் செலுத்தினாள் சௌமி...
கிளிக்... கிளிக்... பளிச்... பளிச்...
என கேமரா மேன் புகைப்படங்களை அடுத்தடுத்து எடுக்க... திடீரென திகைத்து நின்றாள் சௌமி... வார்த்தைகள் ஊமையாக பேசமுடியா பேதையாய் போனாள் சௌமி...
சரி போகட்டும் என தன் வாய்பை தவறவிட்ட சோகத்தில் கனத்த இதயத்தோடு மேடைவிட்டு இறங்கினாள் ...
அப்போது ஓர் ஆறுதல் குரல், என்னம்மா ஆச்சு நல்லா பேசின ஏன்மா திக்கிட்ட என கேமரா மேனிடமிருந்து வர...
சௌமியின் தைரியச்சுவர் சுக்குநூறாய் போனது... கண்களில் கண்ணீர் கடல் பொங்கியது... தன் அழுகுரலை அவ்வரங்கிள் சௌமி அரங்கேற்ற, சில ஆதரவு கரங்கள் அவள் துயர் துடைத்து தைரிய சோடா கொடுக்க அருகில் சென்றனர்... விடும்மா பாத்துகலாம் நல்லாதான் பேசின என அவளை சமாதானம் செய்து சந்தோஷ பேரலையில் படகேற்றினர்...
கடிகாரம் கடகடவென சுழன்றது... நேரம் ஓடியது ... போட்டிகள் முடிந்து பரிசுகளை அறிவித்தனர்...
அதிஷ்ட தேவதை அன்று வாயாடி வனஜாவுக்கு இரண்டாவது பரிசை கட்டுரைப் போட்டியில் வாரி வழங்கியது...அட கடவுளே...
பள்ளியில் என்ன நடந்திருக்கும்...
வாருங்கள் நேரம் கடந்த அந்தக் காணொலியை ரிவைன் செய்வோம்... பாலுவிடம் சிக்கிய விஷாலி ஆற்றில் நழுவும் மீன் போல தத்தளிக்க அருகில் இருந்த மஞ்சு ஹலோ... வழிவிடுங்க நாங்க போனும் என லேசாக சீறினாள்... ஒன்ன யாருடி இங்க நிக்க சொன்னா கிளம்பு டி என பாலு அரட்ட...
தைரிய மங்கை மஞ்சு, போடி வாடின்னு சொன்ன மரியாத கெட்டுப் போயிடும் பாத்துகோ... என மீண்டும் சீறிப் பாய்ந்தாள்... இங்க பாருடி என் முன்னாடி நிக்காத ஒழுங்கா ஓடிப்போயிடு என பாலு கொந்தளிக்க அவன் உடனிருந்தோர்... வாடா மைச்சான் போலாம் பிரச்சன வேணாம்டா வாடா என அவனை பற்றி இழுத்தனர்... மஞ்சுவை பார்வையிலே எரித்தபடி பாலு அவ்விடம் விட்டு அகன்றான்...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...