அந்த ரம்யமான இரவில்...
மூன்று மலர்களும் சிந்தனையில் தவித்துகொண்டிருந்தது...
விஷாலி மற்றும் சௌமி இருவரும் தாம் செய்தது சரியா??? தவறா??? என தத்தளிக்க...மறுபுறம் மஞ்சு தனக்கு என்ன நடக்க போகிறதோ என சிந்தித்த வேளை...
தட தட வென அறையினுள் நுழைந்தது அந்த அந்நியக் கூட்டம்...
மஞ்சு பதறிப்போனாள்... யார் இவங்க என தன் இமைகளை லேசாக திறந்து நடப்பதை கவனித்தாள்...ஹே எழுந்திரிடி ... கார்த்திகா எழுடி ...
விழித்தால் வித்தாரக்கள்ளி கார்த்திகா...
டேய் இங்க ஏன்டா வந்திங்க... வார்டன் பார்த்தா பிரச்சன ஆயிடும் போட நல்லதம்பி உன் ப்ரண்ட்ஸ கூட்டிட்டு போடா...
செல்லம் நா போறேன் அதுக்கு முன்னாடி வந்த வேலைய முடிச்சுட்டு போறேன்...மஞ்சு முகம் வியர்தபடி அங்கு நடப்பதை நடுக்கத்துடன் கவனித்தாள்... என்ன பண்ண போறாங்க இவள... ஐயய்யோ எனக்கு வேற பயமா இருக்கு நான் முழிச்சு இருக்கத இவனுங்க பார்த்துட்டா என்ன நடக்குமோ தெரியலயே... ஆனா அவனுங்க இவள என்ன பண்ண போறாங்கனு பார்க்காம தூக்கமும் வராதே... நான் என்ன பண்ணுவேன்...
நல்லதம்பியின் நண்பன் கார்த்திகாவின் கண்களை மூடினான்... மெல்ல அவள் கண்களை திறந்தான்... சட்டென நல்லதம்பி தன் கையிலுள்ள கேக்கை கார்த்திகாவின் முன் நீட்டி... ஹேப்பி பர்த்டே செல்லம்...
ஐ லவ் யூ...
என அவளை கட்டி அனைத்தான்... அவளும் காதலில் கரைந்து அவனை கட்டித் தழுவினாள்... தேங்க் யூ டா... ஐ டூ லவ் யூ டா ... என காதல் வசனங்கள் பரிமாரப்பட்டன.. கேக் வெட்டி வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுத்துவிட்டு நல்லதம்பி அவன் நண்பர்கள் அனைவரும் இரவின் இருளில் மறைந்தனர்... கார்த்திகா மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...