நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க ...
என காற்றில் மெல்லிசை பரவிட அழகிய காலை வேளையில் அந்த விடுதியில் கடவுளை நோக்கி கானமிசைத்தன அழகு பதுமைகள்... ஹாஸ்டலில் ப்ரேயர் முடிந்தது...
வழக்கமான செயல்கள் வழி மாறமல் நடந்தன எப்படியோ, ஒரு வாரம் கடந்து புதியவர்கள் பழையவர்களோடு நட்பு வேலி அமைத்து அழகு பார்க்கத் துவங்கினர்... க்ரிங்ங்ங்... என மணியோசை காதை கிழிக்க அனைவரும் ஸ்டடி ஹால் விட்டு கீழே சென்று காலை உணவை உற்று நோக்கினார்கள் ஓஓஓஓ சே இன்னைக்கும் மாரிதாஸ் இட்லி தான்டி மெஸ்ல என கதறியவர்களின் மெசேஜ் காற்றில் பரவி ஹாஸ்டலை கலக்கியது... எல்லோர் நாவிலுள்ள சுவையறும்புகளும் கலங்கின... காரணம்... காலை உணவு இட்லி என்பதில்லை, சுத்தத்தின் எதிரி மணங்கமலும் மாந்தர் மாஸ்டர் மாரிதாஸ் சுட்ட இட்லி என்பதால்...
அவர் தான் அழுக்கிற்கு அடைக்களம் தந்து அந்த விடுதியில் பல ஆண்டுகள் சமையல் அனுபவம் பெற்றவர் என்ற புரலி ஆண்டாண்டாக அனைவர் காதிலும் ஒலிக்கும் உண்மை...பள்ளியில்... அனைத்து வகுப்புகளுக்குள்ளும் ஆசிரியர்கள் அணிவகுக்கும் நேரம்... சட்டென ஓங்கி அணைந்த ஸ்டூடண்ஸின் கூச்சல்...
குட் மார்னிங் சார்ர்ர்... குட மார்னிங்,
நேத்துக்கு என்ன பாத்தோம் என வனஜாவை நோக்கி பிரதாப் சார் கேள்விகளை தொடுத்தார்... வாயாடி வனஜா வின் பக்கம் போன கேள்விகள் கேடயத்தில் பட்ட அம்புகள் போல சிதறடிக்கப்பட்டன.. ஆமங்க வனஜா ஒரு டாப்பர் அந்த க்ளாஸ்ல...
பீரியட் முடிந்து ஆசிரியர் வெளியே செல்ல... அலறினாள் பிரவீனா அவ்வ் லூசாடா நீ என பாலா வை திட்டி தீர்த்தாள் ... இவள் இந்த க்ளாசில் அனைவராலும் கலாய்க்கப்படும் ஓர் அரைகிறுக்கி... இதையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டே இதழோரப் புன்னகையோடு சன்னலோரம் சாய்ந்தாள் சௌமியா...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...