நாணல் புல் போல் வெட்கத்தில் வளைந்து நெழிந்து அவன் முன் மஞ்சு நின்ற வேளையில்...
இமயமலையிலுள்ள பனியில் மூழ்கியவன் போல் உறைந்து நின்றான் அவள் முன் சந்திரன்...
என்ன சொல்ல போகிறாய் என மஞ்சுவின் மனம் ஏங்க...
எப்படி சொல்ல என தயங்கி அவள் அழகில் மயங்கி சந்திரன் நிற்க...டப் டப் டப்....
என ஒவ்வோர் வகுப்புகளின் கதவுகளையும் அடைத்து வந்தாள் அந்த ஸ்கூல் ஆயா...சத்தம் கேட்டதுதான் தாமதம் தான் சொல்ல வந்த விஷயத்தையும் தன் மனதோடு பூட்டி விட்டு அவ்விடம் விட்டு பறந்தான் சந்திரன்...
மயங்கி நின்ற மஞ்சு விழித்தாள்...
டேய் சொல்லிட்டு போட... நில்லுடா டேய்... போச்சு இன்னிக்கும் சொல்லல... என்ன சொல்ல வந்தானோ அதுவும் தெரியலயே...ஆயா வகுப்பை அடைக்க வந்தாள்... என்னடா கண்ணு இன்னும் வீட்டுக்கு போகலியா... போமா கரெக்டா டயத்துக்கு வீட்டுக்கு போயிடுமா தேட போறாங்க...
அப்புடியா பாட்டி... போறேன்... நீங்க டயத்துக்கு ஸ்கூல பூட்டிருவிங்க போல...
ஆமா.. கண்ணு, இன்னிக்கு கொஞ்சம் வெள்ளனா வந்துட்டேன்... சரிமா நீ பார்த்து போ...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...