க்ரிங்ங்ங்...
மணியோசை பள்ளியில் பரவி,
ஆரவாரத்தோடு வகுப்புகள் ஆரம்பிக்க ஆனந்தத்தில் மூவரும் அவரவர் வகுப்புகளுக்குள் சென்றமர்ந்த வேளை...
சௌமியின் வகுப்பில் தமிழம்மா காளியம்மாள் நுழைந்தார்... பேருக்கு ஏற்றபடி உக்கிரமாய் இருந்த காளி பிரவீனாவை நோக்கி ஐம்புலன்கள் என்னடி சொல்லு என கண்களை உருட்ட, பதிலில் கண் காது மூக்கு வாய் நெஞ்சு என உலறினாள்... ஆமா... உன் மூஞ்சி நீ எல்லாம் படிக்கவாடி வர ஏன் உசுர வாங்குரிங்க எனக் கோரதாண்டவம் ஆடினார் காளியம்மா...
அவ்வேளையில் பிரதாப் சார் உள்ளே வந்தார் குருப் லீடர் பிரிப்பதற்காக, வாங்க சார்... இந்த செட் ரொம்ப மோசம் சார் ஒன்னும் சரியில்ல என சலித்துகொண்ட காளியை சமாளித்தார் பிரதாப் சார்...
வனஜா, சௌமியா, சந்திரன், வருண், சந்தியா, அரவிந்த் என குரூப் லீடர்களை அறிமுகம் செய்தார்...மற்றொரு பக்கம்...தங்கள் வகுப்பில் மஞ்சுவும்,விஷாலியும் ராம் சாரிடம் சகஜமாக பேசி சிரித்து கொண்டு க்ளாஸில் நேரம் போக்கினர்... இறுதியாக பெல் அடித்தது... ராம் சார் எல்லாரும் நாளைக்கு எக்ஸாம்க்கு நல்லா படிச்சுட்டு வாங்க நாளைல இருந்து ஒரு வாரம் தேர்வு...ஸோ மார்னிங் செக்ஷன் படிக்கனும் மதியம் முழுக்க எக்ஸாம் பார்ப்போம் யாரு நல்லா படிக்குராங்கனு... என அறிக்கை விடுத்து ஸ்டாஃப் ரூம் சென்றார் ராம் சார்...
சில மணி நேரத்தில் உணவு இடைவேளை மூவரும் விடுதிக்கு உணவருந்த செல்லும் வழியில் விஷாலியை இரு கண்கள் பின்தொடர்ந்தன.. ஒருவருக்கும் ஒன்னும் தெரியல... போய் நல்லா சாப்டு சிரித்தபடி வகுப்பு நோக்கி செல்லும் வழியில் விஷாலி... விஷாலி... என எங்கோ அவள் பெயர் ஏலமிடப்படுவதை கண்டு மூவரின் கண்களும் தேடின.. ஆனால் ஒன்றும் பிடிபடவில்லை...
YOU ARE READING
🌺மூன்று🌻 மலர்கள்🌸...
Romanceஇது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...