பிளவு

934 95 98
                                    

"அனுவ காணோமா?? " என நான் மேலும் பதற்றமானேன்....

"அம்மா என்னமா சொல்றீங்க.... நிஜமாவே அனுவ காணோமா??".....என உள்ளூர எழுந்த பதற்றத்தை மறைத்து கூற.....

"இரண்டு நாளாவே அவ சரியாவே  சாப்பிடவே இல்லடா... ரூம விட்டு வெளியவே வரல..... என்னனு கேட்டாலும் சொல்லல... யார்கிட்டயும் பேசல..... இன்னைக்கு காலைல இருந்து அவளை ரூம்ல காணோம்.. போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது....தேனு பாவம் டா... காலைல இருந்து அழுதுட்டே இருக்கா..... "....வருத்தம் மேலிட ஆரம்பித்தவர்..

"உண்மைய சொல்லு... எப்பவும் மம்மினு தானே சொல்லுவ... இன்னைக்கு அம்மானு சொல்லற.... ஏதோ இருக்கு.... அவளுக்கு உனக்கும் அவளுக்கும் சண்டையா??? அவளுக்கு உன்னைய தவிர பிரண்ட் யாரும் இல்ல.... " அதிகார தோரணையில் என்னிடம் வினவிட.....

அழுத்த மிகுதியால் என் கையினால் நெற்றியை தேய்த்தபடி.... "அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல மம்மி ..."என பொய்யுரைக்கும் போது மனதின் ஓரத்தில் ஏதோ ஒன்று அழுத்தியது...

"இங்கதா மம்மி எங்கயாச்சும் போயிருப்பா... தேனு அத்தைய கவலைபட வேணாம்னு சொல்லுங்க......நான் அனுவோட வீட்டுக்கு வரேன் " என அம்மாவை சமாளிக்கும் வகையில் பேசி அழைப்பை துண்டித்தேன்.....

நான் பேசிய அனைத்தையும் கேட்ட யுவி "என்னாச்சு?? அனன்யாக்கு என்ன??"என வினவினான்....

அவனிடம் மறைக்க விருப்பமின்றி அனுவிடம் காலையில் அலைபேசியில் பேசியது முதல் மாலை அலைபேசியில் அவளுடன் சண்டையிட்டதுவரை....அம்மாவுடன் அலைபேசியில் பேசியவரை... அனைத்தையும் கூறினேன்.....

அனைத்தையும் பொறுமையாக கேட்ட யுவியின் முகம் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.....

"முதல போய் அனன்யாவை தேடு சித்து" என யுவி சொல்லிட

"ஆனா நீ.... "என நான் முடிக்கும் முன்னரே

யுவி "என்னைய பாத்துக்க குக்கிங் அங்கிள் வந்துருவாங்க.... நீ போ" என்னை கிளப்பினான்...

முழுவல் Where stories live. Discover now