தீருமா குழப்பம்..??!!

924 83 63
                                    

"சித்து... நாளைக்கே நான் உன் கம்பெனில ஜாயின் பணிக்குறேன் " என அனு சற்று உரக்கமாக அழுத்தி சொல்ல.....

என் கண்கள் மட்டுமல்ல, அங்கிருந்த அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தில் விரிந்தது....

"நிஜமா தான் சொல்றியா அனு???" என நான் குழப்பத்துடன் கேட்க.....

"உன் காது என்ன கேட்காத?? நாளைக்கு நான் ஜாயின் பண்றேனு சொல்றேன்... புரிஞ்சுதா??? " என அனு மீண்டும் ஒரு முறை அழுத்தி உரக்க சொல்ல, என் கண்களுக்கு பழைய அனுவின் சாயல் புலப்பட..... நான் அமைதியாக சாப்பிடும் பணியை தொடர்ந்தேன்.....

அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அவரவர் அறைக்கு சென்றுகொண்டிருந்தோம்....


இன்றோடு, அனு என் கம்பெனியில் சேர்ந்து ஒரு வாரம் கடந்துவிட்டது....

அனு கம்பெனிக்கு வருவதை முதலில்
நான் யுவியிடம் தெரிவித்த போது, சிறிது சங்கடமாய் உணர்ந்த யுவி, பின் என் வற்புறுத்தலாலும், கெஞ்சலாலும் அரைமனதாய் சம்மதித்தான்...

அனுவை நான் வரவேற்க.... நான் செய்த அனைத்து ஏற்பாட்டையும் மறுத்தவள்....

"நான் சாதாரண இன்டெர்ன்... உனக்கு கீழ வேலை பாக்க போரேன்... எதுக்கு இந்த சீன்??? " என கேட்டு என் வாயை அடைந்துவிட்டாள்.....

இந்த ஒரு வாரம்....... நான் ஒரு நொடி கூட என் அனுவை பிரியவில்லை...

இந்த ஒரு வாரத்துல அனுவிடம், நிறைய மாற்றங்களை நான் கண்டுகொண்டேன்...... கணிதம் என்றாலே பிடிக்காதவள், இன்று ஷேர்மார்க்கெட்டில் எகனாமிக்ஸ் பற்றி எனக்கே வகுப்பு எடுக்கிறாள்....

அனைவரிடமும் மிக சகஜமாக பேசுகிறாள்....

ஆச்சர்யத்தின் உச்சம் என்னவென்றால், யுவியிடம் ஒருமுறை பேசினாள்... தொழில் ரீதியாக மட்டும்...

இந்த ஒரு வாரமாக அனு எனக்கு மிகவும் புதிதாய் தெரிந்தாள்.... நான் பெரும்பாலும் அனுவுடன் இருக்கவே விரும்பினேன்...

இந்த ஐந்து வருட பிரிவை இந்த ஒரு வாரத்தில் ஈடு செய்ய முடியாவிட்டாலும்.... என் பெரும்பாலான நேரத்தை அனுவுடனே செலவிட விழைந்தேன்....

முழுவல் Where stories live. Discover now