முன்னோட்டம் -2

727 78 49
                                    

குளித்து முடித்து ஆங்காங்கே அவன் உடலில் படிந்த நீர்துளிகளை, துண்டினால் துடைத்தபடி..... தன் முன்னால் உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவன்.....

   அவனின் மலர்ந்த  முகம், தன் இதயராணியின் முகத்தை நினைவு கூற,  அவனறியாமல் அனிச்சையாக அவன் முகமானது,  மத்தாப்பு வெடித்தது  போல்,  பிரகாசமாக, களிப்பில் மிளிர்ந்தது.....

அதே பிரகாசம் மாறா முகத்துடனே.... தலையை ஆட்டியபடி,  துண்டினால் தன் தலையின் ஈரத்தை உணர்த்தியவன்.....

நெடுநாட்களுக்கு பிறகு, தன்னில்  பாதியான அவளை காணப்போகிற நினைப்பு.....எல்லையில்லா களிப்பில்  அவனை ஆழ்த்த, துவட்டிய துண்டினை தன் கழுத்தில் மாலை என அணிந்து,  தன் அறையில் உள்ள  மெத்தைமீதேறி துண்டினை அசைத்து ராகமே இல்லாமல்.... நடனமாட துவங்கினான்....

  

ஆடி களைத்த அவன்,  தன் அலமாரியை திறந்து.... ஒவ்வொரு சட்டையாய் தனக்கு போடுவதும்,  கழற்றுவதுமாய் தன்னையே குழப்பிய வண்ணம்,  சட்டையை ஆராய்ந்து கொண்டிருந்தான்....

இறுதியில் ஒரு சட்டை அவனுக்கு திருப்தியை தர மீண்டும் மகிழ்ச்சி அவனை ஆட்கொள்ள, சிரித்தவாறு அந்த சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி,  சட்டையை முழங்கைக்கு மேலே  மடித்துவிட்டான்...

சிரித்தபடியே தன் கையில் கைக்கடிகாரம் அணிந்தவன்....  தலையை சீப்பினால் வாருவதுமாய்,  பின் கையினால் கலைப்பதுமாய்.... இப்படியே சில நிமிடங்களை கடத்தியவன்.... இறுதியில் தனக்கு திருப்தி அளிக்கும் வகையில் தன் தலையை வாரிமுடித்தவன்...

கண்ணாடியில் தன் முகம் பார்த்தவன், அதில் அவன் தேவதை முகம் வெளிப்பட..... அவளின் நினைவலைகளில் விழுந்தான்....

"ஐந்து வருசமாச்சு.... அவளை பாத்து.... இப்போ எப்படி இருப்பா.....இந்த ஐந்து வருசமா நான் நானாவே இல்ல.... அவளை பத்தி நினைக்காத நாளும், நேரமும் இல்லவே இல்ல..... எல்லாம் இருந்தும் அவள் இல்லாம எனக்கு,  எதுவுமே பிடிக்கல....

"ஏன்னா.... அவள் தான் நான்.... அவள் இல்லாம நான் இல்லவே இல்ல.... இருக்கவும் மாட்டேன்... என் மனம் முழுசும் அவ மட்டும்தான் இருக்கா  " என சிறிது புன்னைகைத்தவன்......

"ஆனா,  இன்னைக்கு அவ வரா....அவளை பாக்க தான் இப்போ கிளம்பிட்டு இருக்கேன்....  "

"என்னோட அனு.... என் தேவதை.... என்னோட அழகி.... என்னோட செல்ல கோபக்காரி..... இன்னைக்கு வரா,  நான் அவளை பாக்க போரேன்..." என அவள் நினைவுகளில் தித்தித்தவனின் கவனத்தை  நிகழ்  உலகிற்கு அழைத்து வந்தது.... அவன் கைபேசியின் குறுஞ்செய்தி ஒலி......

அக்குறுஞ்செய்தியினை பார்த்தவனின் கண்கள் & இதழ்களில் மென்னைகை பூக்க, தன் கார் சாவியினை ஆள்காட்டிவிரலில் மாட்டி சுழற்றியபடியே...

ஒளிமிகுந்த  முகத்துடன், விசிலடித்தவாறு வெளியில் புறப்பட்டான்.... தன் உயிரானவளைத்  தேடி.....

Author note :

அனைவருக்கும் வணக்கம் மற்றும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎂🎊🎉💫✨...

இது update இல்ல.... Teaser -2...... புத்தாண்டு சிறப்பு பதிவு....

இக்கதையை பற்றிய தங்களின் எதிர்மறை மற்றும் நேர்மறையான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....

                         இப்படிக்கு,

                      என்றும் அன்புடன்,

                           💞 சனா 💞

முழுவல் Where stories live. Discover now