அயலவன்

928 83 125
                                    

அனுவின் வார்த்தைகளை காதில் வாங்கிய, சித்துவின் இதயம் உடைந்த கண்ணாடி போலானது....

அனுவின் மேலிருந்த அவனது பிடி தளர்ந்தது....

கண்கள் குளமாகி, கண்ணீர் விழிகளில் தேங்கி நின்றது.....

அவன் மூளையில் ரசாயனம் சுரந்து பலவகையில், அவனை சிந்திக்க தூண்டியது..... " அனுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? என்னோட அனுவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??..... ச்ச..... அப்டிலாம் இருக்காது.....

அவள் பொய் சொல்றா.......................... ஆமா அவள் பொய் தான் சொல்றா...................
அவளை நம்பாத சித்து.................. அவள் சரியான டுபாக்கூர்.....
உன்னை ஏமாத்த பொய் சொல்றா..... " என அவன் மூளையை எச்சரிக்கை மணி அடிக்க.....

அவன் மனமோ உடைந்த நிலையில், செயலற்று பலமிழக்க, உள்ளூர நொறுங்கினான் சித்து......

"நீ பொய் தான சொல்லுற,?????...." என சித்து நம்பாமல் கேட்க..

"நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்லணும்..... எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.... இது தான் உண்மை " என ஆவேசமாய், அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டன, அனுவின் வார்த்தைகள்...

"நம்ம ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட் ஆயிடுச்சு... விளையாடாத அனன்யா... " என அனு சொன்னது பொய்யாகிவிடாதா?? எனும் ஏக்கத்தில், சித்து கேட்க......

" ஐயோ....நான் எனக்கு கல்யாணமே ஆயிடுச்சுனு சொல்றேன்.. நீ என்னனா அந்த டம்மி எங்கேஜ்மெண்ட் பத்தியே பேசிட்டு இருக்க.. .....
நான் ஏற்கனவே கல்யாணமானவ..... நான் சொல்றது உன் மரமண்டைக்கு புரியுதா..... இல்லையா.... " என அனன்யா கத்தி சொல்ல......

அவள் சொன்ன விதம்..... சித்துவின் மனதில் பற்றி எரியும் உணர்ச்சி சுவாலைக்கு, எண்ணெய் ஊற்றுவது போல் அமைய, அவனுள் ஒளிந்திருக்கும் மிருகம் வெளிவர, அனுவின் முழங்கையை  அழுத்தி பற்றியவன்,

" கல்யாணம் ஆய்டுச்சுன்னு சொல்ற... கழுத்துல தாலிய காணோம்.... காலுல மெட்டியை காணோம்....

பேருக்கு கூட நீ பொட்டு வச்சு நான் பாத்ததில்லை.... எல்லாத்துக்கும் மேல உனக்கு புருஷன்னு ஒருத்தன் இருக்குறதுக்கான எந்த அறிகுறியும் இல்லை....

முழுவல் Where stories live. Discover now