9

1.4K 71 10
                                    

காரில் அமர்த்தி நெடுந்தூரம் அழைத்து வந்து அவளது கண்களை திறக்க செய்தான் அந்த ஆசாமி...மெதுவாக தன்
கண்களை திறந்த அவளுக்கு மகிழ்ச்சி எல்லை மீறியது. ஏனெனில் அவளுடன் ஓவியக்கல்லூரியில் ஒன்றாக படித்த பூவரசன் தான் அந்த ஆசாமி.

டேய் நீயா பக்கி...எதுக்கு இந்த திகில்?உன்னை.... ராஸ்கல் என்று செல்லமாக அடிக்க....அடியை வாங்கிய அவன் "ரேணு விடு டி...நான் மென்மையானவன் அப்படிங்கறது னால எங்க அப்பா எனக்கு பூவரசனு பேரு வச்சாரு நீ இந்த பூவை இப்படி அடிக்கிற அப்றம் பூ வாடிபோகாதா" என்று புன்முறுவலுடன் கூற

"ம்ம்ம் பின்ன என்ன ?லூசு இப்படியா பன்னுவது?நான் கொஞ்சம் நேரத்தில் பயந்தே போயிட்டேன் ப்பா....இன்னொரு வாட்டி இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம்"

"ஹாஹா.... சும்மா ஒரு ஷாக் தரலாம்னு வேற ஒன்னுமில்லை சரி எப்படி போது டி உன் வாழ்க்கை?"☺️☺️☺️

"ம்ம்ம் அது எங்க டா போது நானே தள்ளிட்டு போறேன்..."

"ஓ....ரொம்ப தள்ளாத விழுந்துற போது"என்று நக்கலடிக்க

"அதான் தாங்கி பிடிக்க நீ வந்துட்டியே இனி எனக்கு என்ன கவலை"

"ஹாஹா.....😀😀சரி வா ஒரு காபி சாப்பிடலாம் என்று அவன் எதார்த்தமான குரலில் கூற

"டேய் டைம் 8.30 ஆகுது வீட்டில் தங்கச்சி தனியா இருக்கா ....இப்ப நான் உன் கூட காப்பி குடிக்கிறது ரொம்ப முக்கியமா சொல்லு?"

"முக்கியம் தான் டி எனக்கு ஏன்னா ரொம்ப நாள் கழித்து உன்னை பார்க்கிறேன்ல அப்படியே காபி குடிச்சிட்டே உன்கூட கொஞ்சம் நேரம். பேசாலானு தான்.சரி வா உன் கையால நீயே உன் வீட்டில் போட்டு கொடு என்று மறுகணமே தன் எண்ணத்தை மாற்றியவன் அவளது பதிலுக்கு காத்திருக்க...

அவளோ கண் சிமிட்டியபடி"ம்ம் அது ஓகே" என்று பதிலளிக்க இருவரும் அவனது காரில் பயணித்தனர். தங்களது கடந்த கால கல்லூரி காலக்கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டபடி. அந்த இரவு நேர கார் பயணம் அதுவும் பழைய கல்லூரி நட்புடன் என்கிற போது இருவருக்கும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது.நட்பு என்றாலே ஒரு சுகம் தானே, எனினும் பூவரசனுக்கு நட்பை தாண்டிய ஒரு காதல் உணர்வு மனதினுள் இருந்தாலும் வெளிப்படையாக கேட்க சற்று தயக்கமும் பயமும் இருந்தாலும் வீட்டில் வைத்து நேரடியாக கேட்க எண்ணினான்.வீட்டினுள் நுழைந்த அந்த நொடி மல்லிகா தன் தமக்கை ரேணுகாவை பார்த்து கட்டி அணைத்து அழத்துவங்கினாள்"அக்கா நீ எங்கே போயிருந்த நான் பயந்தே போயிட்டன்"என்று,உடனே அவளை மெல்ல தேற்றிவிட்டு "இதோ இவர் தான் பூவரசன் என் கல்லூரி நண்பர்"என்று அறிமுகம் செய்துவைக்க "வணக்கம் அண்ணே " என்று அவனுக்கு வணக்கம் வைக்க அவனும் "ஐயோ மச்சினிச்சி நம்பளை அண்ணன் சொல்றாலே என்று பெறுமூச்சு விட..

காவலும் காதலும்Where stories live. Discover now