காரை நிறுத்திவிட்டு ரிசார்ட் மேனஜர் கிட்ட அவனோட மெம்பர் ஷிப் கார்ட்டை நீட்டி தனக்கு ஒரு நாள் தங்க அறை வேண்டும் என்று பதிவு செய்தான்.
"ஐயா உங்களுக்கு இல்லாததா ??☺️இந்தாங்க சாவி மேல பால்கனி ஒட்டினாப்புல ரூம் இருக்கு ....தங்கிக்கோங்க .நைட் சாப்பிட எதாவது ஆர்டர் பன்றீங்களா???☺️நம்ப ரெஸ்டாரன்ட் ல இன்னைக்கு சூடான நாட்டுக்கோழி பிரியாணி ஸ்பெஷலா பன்னிருக்காங்க வேற எதாவது வேண்டும் என்றாலும் சொல்லுங்கள் வரவழைத்து தரேன்"
"நாட்டுக்கோழி மட்டுமா சூடா இருக்கிறது நானும் தானே " என்று மனதளவில் நினைத்துவிட்டு ஒரு சின்ன சிரிப்புடன்,"சரி சரி இப்பவே வாங்கிட்டு என்னுடைய அறைக்கு போயிடுரேன்... நாளை வரைக்கும் நானாக கூப்பிடுற வரைக்கும் ரூம் சர்வீஸ் எவனையும் அனுப்ப வேண்டாம் ஓகேவா..என்று மேனஜரிடம் தெரிவித்தான் ஆதி.
"சரிங்க ஐயா...இந்தாங்க பிரியாணி கவர்.இரண்டு இருக்கு வாட்டர் பாட்டில் எல்லாம் அதோடவே இருக்கு. ஐயா பீர் கூலிஙா இருக்கு வேணுமா...என்று வெடுக்கென்று கேட்டவுடன் "தெய்வமே வைத்துல பால் வார்த்த ...கொடுங்க ஒரு பீர்"என்று அதையும் வாங்கிக்கொண்டு திரும்ப அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் ஆனந்தி...
"ம்ம்ம் நல்லா வருத்தெடுக்க போறாள்"என்று நினைத்தவாறே அவளை நோக்கி தன் எதார்த்தமான பார்வையை செலுத்திவிட்டு தொடர்ந்து அவள் ஏதோ முனுமுனுக்கஅதை கவனித்து கொண்டே அனைத்திற்கும் சேர்த்து பணம் செலுத்தியவன்"சார் ஸ்பா எங்க இருக்கு?என்று வினவ..மீண்டும் அவளுக்கு கோபம் வந்தது.
டார்லிங் நான் ஸ்பா...எனக்காக கேக்கல கவலைபடாத ...உனக்காக தான். போ...போ..போய் அங்க இருக்கிற அழகு கலை நிபுணர் கிட்ட தயார் ஆகிட்டு வா...என்று கூற
"அய்யே அதெல்லாம் ஒன்னும் வேணாடாம்....நான் இப்படியே இருக்கிறேன். எனக்கு சாதாரணமா இருந்தால் தான் பிடிக்கும் மாமா. மஞ்சள் தேய்த்து குளிக்கும் போது கிடைக்காத அழகா அழகு கலையில் கிடைக்க போகுது"என்று சலித்துக்கொள்ள
YOU ARE READING
காவலும் காதலும்
General Fictionஇது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.