16

1.1K 73 40
                                    

ஆனந்தியும் ஆதியும் ஒருவருக்கொருவர் புரிந்து இருந்தாலும் இன்னும் கணவன் மனைவியாய் தாம்பத்ய உறவில் ஒன்று சேரவில்லை .முதலிரவன்று அவளுக்கு அந்த நாட்கள் ஏற்பட்டதால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதற்கு பின்பு ட்யூட்டியில் சேர்ந்து வழக்கம் போல்  பணிபுரியும் பிஸியில் இதை பற்றி சிந்திக்கவில்லை.

இப்பவரைக்கும் எதுவும் நடக்கவில்லை என்று குடும்பத்தில் எவருக்கும் தெரியாது...அட இதெல்லாம் வெளியே சொல்ற விஷயமாம் என்று யாரிடமும் சொல்லாது இருவரும் மூடிமறைக்க...இன்னியோட கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆனது எனவே மாமியார் காமாட்சி இவர்கள் ஒன்று சேர்ந்த நாள் சரி தானே அப்படி என்றால் ஒரு மாதம் கடந்த நிலையில் நல்ல செய்தி இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அதை நாசுக்காக மருமகளிடம்" ம்ம்ம் ஆனந்தி உன் கிட்ட ஒன்னு கேக்கனும்" ..என்று தயங்கியபடி ஆரம்பிக்க

சொல்லுங்க அத்தை (ஆ..ஆ கிழவி இதை தான் கேக்க போகுது னு அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது)

"அம்மாடி  இப்ப உனக்கு தலை கில எதாவது சுத்துற மாதிரி இருக்கா"?☺️

"அட போங்க அத்தை எனக்கு என்ன லோ பி.பி இருக்கு?"☺️என்று வேணும்என்றே அவள் நக்கல் அடிக்க..

"சரி அது போகட்டும் வாந்தி கீந்தி வருதா?"என்று மீண்டும் அதையே சுட்டி கேக்க...வெடுக்கென்று அவள் "அத்தை நான் என்ன நோயாளி யா என்ன?😊என்று சிரிப்பை அடக்க முடியாது ஆனந்தி இதை சொல்லிவிட்டு சிரிக்க.

"அட கழுத...இவ நம்ப சொல்றது புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே?"😢என்று சுண்டக்காய் மூஞ்சியை வச்சிக்க... அத்தையின் முகம் வாட்டம் புரிந்தாலும் வேறு...வழியில்லை இந்த சங்கடமான சூழ்நிலை யிலிருந்து தப்பிக்க.

இதை கதவுக்கு பக்கத்தில் நின்று ஒட்டுகேட்ட ஆதி...."ச்ச இன்னைக்கு எப்படியாச்சும் இதை நடத்திரனும் இல்லாவிட்டால் ஒவ்வொரு மாதமும் தாயின் குடைச்சல் ஆனந்தியால் தாங்க இயலாது என்று எண்ணி முதலிரவிற்கு தேவையான மல்லிகை பூவும் ,வாசனை திரவமும்  வாங்கி வர கடைக்குச் சென்றான்.

காவலும் காதலும்Where stories live. Discover now