28

1K 75 9
                                    

தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை தன் அக்காவிடம் தெரிவிக்காமலே தெரிந்துவிட்டது என்பதாலோ என்னமோ குற்றவுணர்வில் அனைத்தும் ஒப்பக்கொண்டாள். அவள் சொல்ல சொல்ல ரேணுகாவிற்கு அதிர்ச்சியும் கண்ணீருமே மிஞ்சியது. இவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டதே தவறு இருப்பினும் ஏதோ நல்ல வாழ்க்கை அமைந்திருந்தாலும் பராவாயில்லை ஆனால் இப்படி போய் மாட்டிக்கொண்ட தன் தங்கையின் நிலமையை அறிந்து வருந்தினாள். அவளின் வருத்தம் நியாயமானது தான் .

"அக்கா நான் கிளம்புறன் நான் போய் தான் வீட்டில் அவருக்கு சமைக்கனும் பை..கா..".என்று கட்டி தழுவி. தனது ,ஏக்கத்தை கண்ணீர் மூலம் சிந்திவிட்டு கிளம்பினாள்.
🐦🐦🐦🐦🐦
கார்த்திக் மற்றும் வித்யா இருவரும் ஒரு கோவிலுக்கு சென்றனர். இது அவர்களின் இரண்டாவது சந்திப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில். அங்கு இருவரும் தரிசனத்திற்கு நின்று நின்று அவளுக்கு கால் வலிக்க..."கார்த்திக் எனக்கு கால் வலிக்குது "

அதுக்காக நான் தூக்கி வச்சிக்க வா முடியும் .😁

"அச்சோ....பசிக்குது டா.."

"ஏய் சின்ன புள்ள மாதிரி பன்னாத வித்யா . தரிசனம் முடிந்ததும் சாப்பிடலாம்"

நல்லபடியா தரிசனம் முடிந்தது... சாமியின் கழுத்தில் இருந்த மாலை அவர்கள் கழுத்தில் போடபட்டது... என்னமோ இப்பவே திருமணம் நடந்தது போல இருக்க....மனதில் சந்தோஷம் பொங்கி எழ....இருவரும் கோவில் பிராகரத்தை சுத்திவிட்டு ஓரமாக உக்காந்து பிராசதம் சாப்பிட்டு கொண்டே இருந்தனர்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கையில் அவர்களுக்கு தெரியாமலே கோவில் கதவு பூட்டிவிட்டனர் .

என்ன செய்வதறியாது தவித்தனர்.. அப்போது ஓர் யோசனை சுவர் ஏறி வெளியே குதித்து விடலாம் என்று...ஆனால் வளது புரம் சுவர் எறி பார்த்தால் கோவில் குளம். ஐயோ சுவர் ஏறி வெளியே செல்ல இயலாது போல என்று இடது புரம் சுவர் ஏறி பார்த்தால் அதற்கு கீழே பெரிய பள்ளம்.

எந்த பக்கம் சுவர் ஏறி குதிக்கிறதுனு ஒரே குழப்பம். உடனே கோவிலின் பின்புரம் கோவில் சுவர் ஏற வசதியாக இல்லை.... எனினும் சிரம பட்டு முதலில் கார்த்திக் ஏறிகுதித்துவிட ,அவளால் குதிக்க முடியவில்லை.. நீ தைரியமாக குதித்து விடு நீ கீழே விழாதவாறு பிடித்துகொள்கிறேன் என்று அவன் சொன்ன அடுத்த நொடி அவள் குதித்து விட கையில் வந்து தாங்கிக்கொண்டான்.....

கையில் தாங்குபவன் வாழ்க்கையில் தாங்க மாட்டானா என்ன...

தொடரும்.

காவலும் காதலும்Where stories live. Discover now