29

1K 73 12
                                    

"இந்த கேஸ் சீக்கிரமே முடிக்கனும் ஆதி...உங்க பர்ஸனல் வேலை எல்லாம் கொஞ்ச நாள் ஒதுக்கி வச்சிட்டு சீக்கிரம் கேஸ் முடிங்க...".என்றுஅசிஸ்டண்ட் கமிஷனர் கூற இந்த கேஸ் சம்மந்தமான ஆதாரத்தை திரட்ட முயற்சித்தான்.

ராகவன் இருந்த அதே அபார்ட்மெண்ட் இல் ஒரு வீடு வாடகைக்கு எடுத்தான்..யாரும் உடன் இல்லாமல் தான் மட்டும் அங்கும் தங்கும் அளவு வசதிகள் ஏற்படுத்திக்கொண்டான். அவனுடைய முதல் நோட்டம் மல்லிகா....

ஆம் அவளை கண்காணிக்க துவங்கினான் ஏங்கே செல்கிறாள் என்ன செய்கிறாள் என்று... அடுத்த நோட்டம் ராகவனின் குடும்பத்தினர் . ராகவன் வீட்டுக்கு யார் யாரில்லாம வருகிறார்கள் என்று.

அதே அபார்ட்மண்டில் வேலை செய்யும் செக்யூரிட்டி உள்பட அனைவரையும் நோட்டமிட்டான்.

அவனை விட்டு பிரிந்து இருக்கும் ஆனந்திக்கோ...சீமந்தம். ஆம் அவள் கருவுற்று ஏழு மாதம் ஆகியிருந்தன...அவளது தாய் வீட்டுக்கு செல்ல மனமில்லாமல் இங்கேயே இருந்தாள். சீமந்தம் சிம்பிள்ளா வீட்டிலேயே நடந்தது. இவளுக்கு இப்போது ஒரே ஆதரவு மாமியார் காமாட்சி.

வித்யா....கார்த்திக் கிளினிக் சென்று அவனுக்கு ஒத்தாசையாக இருப்பது ,அவளுடைய கல்லூரிக்குச் செல்வது என்று பரபரப்புடன் இருந்தாள்.தற்போது கல்யாணத்துக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில்... கல்யாணம் "இவன்ட் மேனஜ்மன்டிடம் கொடுக்க பட்டது ஏனெனில் ஆதியால் தன் தங்கையின் கல்யாண வேலைகளை இழுத்து போட்டு செய்ய இயலாது. அவனது மனமும் உடலும்ராகவன் கேஸ் வழக்கில் மட்டுமே உள்ளது. கேஸ் முடித்தால் அவார்டு கிடைக்கும். இன்ஸ்பெக்டர் ஆகி இதான் அவன் எடுத்து நடத்தும் முதல் கேஸ்.

ரேணுகா மீதோ அல்லது ராகவன் மனைவி மீதோ துளி அளவும் சந்தேகம் இல்லை... ஆனால் மல்லிகா மீது சந்தேகம் ஏற்பட்டது.... அவளை கவனித்ததில் அவள் காலை 6மணியிலிருந்து இரவு 9வரை வீட்டில் இல்லை எங்கோ செல்கிறாள் என்பதை அறிந்துகொண்டான். அவள் எங்கு செல்ல வேண்டும் யாரை சந்திக்க செல்கிறாள் இதைலெல்லாம் தெரிந்து கொள்ள முயற்சி செய்தான்.

காவலும் காதலும்Where stories live. Discover now