22

1.1K 72 20
                                    

நாட்கள் நகர்ந்து செல்ல.... கார்த்திக் தனது எதிர்கால மனைவியான நம்ப வித்யாவை சந்திக்கும் நாள் வந்தது. இருவரும் ஒரு மெட்ரோ ரெயிலில் பயணித்தவாறு பேசிக்கொண்டிருக்க.கோயம்பேடுவிலிருந்து ஆளந்துர் செல்லும் ரயில் அது. எனவே அந்த சிறிய இடைவெளி நேரத்தை பயன்படுத்தி இருவரும் அவர்களது அன்பை வார்த்தைகள் மூலம் பறிமாறிக்கொண்டனர்.

முதல்சந்திப்பு என்பதால் இருவருக்கும் முதலில் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது,என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்று ஒன்னும் புரியவில்லை.

"ஆ...ம்ம்ம்... கார்த்திக் ,எதுக்கு திடிருனு என்னை பார்க்க வரசொன்னிங்க?"என்று அவள் முதலில் பேச்சை துவங்க

"ஹாஹா இல்லை இல்லை.. அது வந்து போன்ல என்ன தான் பேசினாலும் முகத்துக்கு நேராக பேசுற மாதிரி இருக்காது அதான் உங்களை நேரில் வரச்சொன்னேன்"என்று கூறி பேச்சை ஆரம்பித்தான்

"ம்ம்ம் ...சரி இது என்ன புதுசா மெட்ரோ ரயிலில்  சந்திப்பு?"என்று அவள் அவனிடம் நக்கலாக கேட்க

"ஒரு வித்தியாசமான அனுபவமா இருக்கட்டும்னு தான்... சும்மா எப்ப பாரு பீச் பார்க் னு சுத்துறதுக்கு இது ஒரு வித்தியாசமான பயணம்."

"ஓ.....மிஸ்டர் கார்த்திக்.. நான் கல்யாணம் முடிந்து கல்லூரி போக அனுமதிப்பிங்களா?"என்று தன் சந்தேகத்தை முன்வைக்க

"சாரி வித்யா அது மட்டும் வேண்டாம் எங்க அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. நாங்க கொஞ்சம் பாரம்பரிய குடும்பம்... ப்ளீஸ் நான் வேணும்னா உனக்கு வீட்டிலேயே இருந்து படிக்கிற மாதிரி ஏற்பாடு பன்னி தரேன்."என்று கூற

அவன் கூறியதை கேட்டதும் முகம் வாட்டம் வந்தது....அதற்குள் அவன் சட்டென்று அவள் மூக்கை கிள்ளி "ஏய் வருங்கால பொண்டாட்டி இப்படி எல்லாம் சொல்லுவேனு நினைச்சியா...ஹாஹா... உன் விருப்பம் போல நீ காலேஜ் போலாம் ....நானே எங்க வீட்டுல அடங்கமாட்டேன்😀இங்க பாரு இன்னொரு முக்கியமான விஷயம் கல்யாணம் முடிஞ்சு நம்ப தனிக்குடித்தனம் தான் போகனும் ஓகேவா....??இதுக்கெல்லாம் நீ ஒத்துகிட்டா தான் டி கல்யாணம்"என்று சொல்லி முடிக்க

காவலும் காதலும்Where stories live. Discover now