21

1.1K 68 10
                                    

காக்கிச்சட்டையை அணிந்து பட்டன் போடும் நேரத்தில் பட்டன் பிய்த்து போன நிலையில் ஆனந்தி வந்து பட்டன் தைத்து தா...என்று கூப்பிட விறு விறு என்று காமாட்சி தன் மகனின் சட்டை பட்டனை தைக்க வந்தாள்....பட்டன் தைத்தவாறு பேச்சு துவங்கினர்..

"ஆதி கன்னு அம்மா உன் கிட்ட ஒன்னு சொல்லனும் என்று தயங்கியபோது ..சொல்லுங்க மா என்று அவளின் தாடையை தூக்கி நிமிர்த்தி புன்னகைத்தான்.

கன்னு... நம்ப வித்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்கலானு நினைக்கிறேன் அதுவும் சிவகாமி மகன் கார்த்திக் ..

மா...அப்படி னா எனக்கு ஓகே தான்.. நல்ல பையன் அவன் சின்ன வயசுல இருந்தே அவனை பார்க்கிறேன் . இப்ப கூட அவன் ஏதோ பிஸியோதெரபி படிச்சு முடிச்சிட்டு கிளினிக் வச்சிருக்கிறதா கேள்வி பட்டுறுக்கேன்.

ஆமா டா ஆதி....அதான் ..நீ வித்யா கிட்ட இதைப்பற்றி பேசு டா

அவ கிட்ட நான் எப்படி மா கேக்குறது போ மா...நான் என் கல்யாணம் பற்றியே பெருசா எதுவும் பேசல யார்கிட்டயும். 😀😀😀😀

அதுகில்ல டா...அவகிட்ட ஒரு அம்மாவா நான் பேசினாலும் ஏதோ சுயநலமா பேசுற மாதிரி இருக்கும். இதுவே ஒரு அண்ணணா நீ பேசும் போது அக்கறை ல பேசுற மாதிரி இருக்கும் அதான்.

இதெல்லாம் கேட்டுட்டு இருந்த வித்யா ""மா...அதுக்கு அவசியமே இல்லை.. கார்த்திக் யாருன்னு சொல்லு கிடு கிடுனு போய் கழுத்தை நீட்டிட்டு வந்துடுறேன்"ஹாஹா..

"அடி பாவி அவ்வளவு வேகத்தில் இருக்கிறியா நீ...அப்ப சரி அவனையே பேசி முடிச்சிடுறன் என்று தாய் காமாட்சி சிரிக்க இதை எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்த ஆனந்தி...தன் என்னவனுக்கு டிபன் பரிமாற டைனிங் டேபிளில் இட்லி எடுத்து வைத்தாள்...அதற்குள் ஆதி அமர்ந்தான்....

என்னங்க இட்லி க்கு வெங்காயம் சட்னி பன்னிருக்கேன் போதுமா?😀

போதும்😀😀😀

ஏங்க...இன்னொரு இட்லி???

போதும் டி...

காவலும் காதலும்Where stories live. Discover now