14

1.2K 76 12
                                    

கல்யாணம் முடிந்த கையோடு மறுநாளே ப்ரண்டுஸ்க்கு ட்ரீட் வைக்க பார்ட்டி ஹாலில் அரேஞ்மண்டு பன்னிருந்தான் நம்முடைய ஆதி..கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ அவனுடைய கல்லூரி தோழி ஒருவள் அவனை அணைத்து வாழ்த்துக்கள் கூற அவனோ "மீனு மா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டிஸ்டண்ட் மெயின்டன் பன்னு என்று நக்கல் அடிக்க"

"போடா போலிஸ் காரா ரொம்ப சீன் போடாத.."என்று அவனது தோளை தட்ட

"சீன் இல்லை டி உண்மை தான் சொல்றேன் என் ஆனந்தி மட்டும் நீ கட்டிபிடிச்சது பார்த்திருந்தா அவ்வளவு தான் சாமி ஆடிருப்பா.."என்று சிரிக்க

"ஆடட்டும் ஆடட்டும்.. எனக்கு என்ன ஆட வராத"என்று தன் கண்களை நெளிய விட 😀

"சரி டி மீனு அதெல்லாம் இருக்கட்டும் இப்ப நீ என்ன பன்ற லைப் ல..?"என்று ஆர்வமாக அவன் தன் தோழியிடம் கேட்க.

"நான் இப்ப ஒரு பொன்னுக்கு கேர் டேகரா இருக்கேன்."என்று அவள் கூறிய பதிலில் ஆச்சரியம் கொண்டான்

"என்ன ?கேர் டேக்கரா யாருக்கு?" என்றான் புருவத்தை தூக்கியபடி

"அது வந்து அது ஒரு பெரிய கதை ,அவளுக்கு 17 வயசு இருக்கிறப்ப அவளை ஒருத்தன் காதலிச்சு வாழ்க்கை தரதா சொல்லி ஏமாற்றி அவளை கற்பழிச்சிட்டான்...அந்த அதிர்ச்சியில் அவளுடைய மனநிலை பாதிக்கப்பட்டுருக்கு ...இப்ப அவளுக்கு துணை அவளோட அண்ணன் மட்டும் தான் பாவம் .அதான் நான் அவளுக்கு கேர் டேகரா இருக்கேன் . அவளை குளிக்க வைக்கிறது துணி மாற்றிவிடுறது தலை சீவி விடுறது நேரத்துக்கு கரெக்டா சாப்பாடு ஊட்டுவது னு ஒரு குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துகிட்டு இருக்கேன். எனக்கு 5000 சம்பளம். ஆனால் இந்த வேலையில் எனக்கு ஏதோ ஒரு மனநிறைவு இருக்கு டா ஆதி" என்று கண்கலங்கியபடி கூற

"ரொம்ப பெரிய விஷயம் மீனு நீ அவங்களுக்கு செய்யுற இந்த உதவி ...சரி அவளை அப்படி ஆக்கியவன் யாருன்னு கண்டு பிடிச்சு கூண்டுல ஏத்தாம விடமாட்டேன் கண்டிப்பா..ஒரு போலிஸ்காரனா இருந்துட்டு இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா விட முடியாது மீனு.நீ அந்த பொண்ணு யாருன்னு எனக்கு காட்ட முடியுமா?"என்று அவளிடம் கேட்க

"கண்டிப்பாக காட்டுறேன் வா...என்று ஆதியை அழைத்து கொண்டு உடனே அந்த வீட்டுக்கு செல்ல..... அங்கு சிறு பிள்ளை போல் தன் அண்ணனுடன் கொஞ்சி விளையாடும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பார்க்கிறப்ப கண்கள் கலங்கியது ஆதிக்கு"

"சார் ...இவரு ஆதி ..இன்ஸ்பெக்டரா இருக்காரு என்னோட பெஸ்ட் ப்ரண்டு ஸோ உங்க தங்கச்சி பற்றின எல்லா விஷயமும் சொல்லி கூட்டு வந்துருக்கேன்...அவன் யாரு என்ன னு கண்டு பிடிக்கிறதா வாக்கு கொடுத்துருக்காரு."என்று அவனை பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தாள் மீனு.

ஹாஹா அதுக்கு அவசியமே இல்லை மீனு.என்று அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூற இடையில் ஆதி குறிக்கிட .."மிஸ்டர் அப்படினா அந்த ஆளு எங்க?"என்று ஆச்சரியத்துடன் கேட்க

"அவன் செத்துட்டான் சார்...நான் என் கையால் அந்த பாவியை கொல்ல நினைச்சன் ஆனால் அதுக்கு முன்னாடி அவனை வேற யாரோ கொன்னுட்டாங்க..எப்படியோ அந்த நாய் செத்துடுச்சு அது போதும் எனக்கு". என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் அவளுடைய அண்ணன்.

எதுவும் பேசமுடியாமல் திணரினான் ...இதற்கிடையில் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கையில் ஒருவனின் பெயர் பச்சை குத்தியிருப்பதை பார்த்து அதிர்ந்து போனான்..

"அ....அந்த பேரு?"...என்று அந்த மனநிலை பாதித்த பெண்ணின் கைகளை காட்டி கேட்க

"அதான் சார் என் தங்கச்சி வாழ்க்கை யை சீர் அழிச்ச பாவியின் பெயரு...பாவம் அவனை நம்பி காதலிச்சு என் தங்கை ஏமாந்துட்டா. அவனை அந்த அளவு நேசிச்சு அவனுடைய பெயரை கையில் பச்சை குத்தியிருந்தாள். இதையெல்லாம் பார்க்கிறப்ப தான் சார் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு".
ஆனால் உங்கள் ப்ரண்டு மீனுவை மறக்கவே மாட்டேன் சார். என் தங்கச்சியை அவ்வளவு நல்லா பாத்துகிறாங்க. வெறும் காசுக்காக இல்லாமல் ரொம்ப கனிவோடு வேலை செய்யுறாங்க. "

"விடுங்க அண்ணே உங்கள் தங்கச்சியை பார்த்துகிறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. " என்று மீனு ஆறுதல் கூற..
இதற்கிடையில் ஆதியின் எண்ண ஓட்டங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"ஓ.....அப்படினா !" என்று எதையோ மனதில் கணக்கு போட்டுக்கொண்டு இருந்தான் ஆதி."

அந்த பெயர் என்ன? ஏன் அந்த பெயர் பாராத்தவுடன் ஆதியிற்கு பல சிந்தனைகள் வந்தது?

தொடரும்

காவலும் காதலும்Where stories live. Discover now