♡~41

40 17 47
                                    

         "நிலா"🌛

என் செல்லமே...

🔹அன்று...
🌜என்னைக் காட்டி
உன் அம்மாவின் அம்மா
சோறூட்டிக் கொண்டிருந்தாள்!
உன் பாட்டியின்
அம்மாவும் அவ்வாறே!...

காலம்காலமாய்
பசியின் இளைப்பாறலாய்
இருந்திருக்கிறேன்!🌜

🌜என்னைக்காட்டி...
என் வீட்டில் பாட்டி
வடை சுடுவதையும்,
மரத்தின் மேல் காகம்
அமர்ந்திருப்பதையும்,
கதைகதையாய்
உன் அப்பாவின் அப்பாவும்👴
உன் தாத்தாவின் அப்பாவும்👴
கதைக்க,
காதைத் திறந்து கேட்டது...
கபடமறியா சின்னஞ்சிறு உலகம்!

🔸இன்று...
மொட்டை மாடியில்
ஜன்னல் ஓரத்தில்
எட்டிப் பார்த்து
காத்திருக்கிறேன்...🌜
யாராவது என்னை
காண மாட்டார்களா...😔
கதைக்க மாட்டார்களா என்று!😞

கைப்பேசியை📱
தூக்கிப் போட்டு
நீயாவது சொல்
நான் 'நிலா' 🌜என்று...!!!

அறிந்ததும்🌹அறியாததும்☆

🌹💐 Ămmű (s)...🌹💐


☆அறிந்ததும்🌹அறியாததும்☆ Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin