குட்டி ரோபோ மோஜோ

127 9 0
                                    

மாலை மணி ஐந்து அடித்திருக்கும் அமைதியான அந்த தெரு சட்டென கலை கட்டி விட்டது. அதற்கு காரணம் தீராவும், வியனும் பள்ளி முடிந்து வந்து விட்டனர், தீராவுக்கு பத்து வயது, அவள் தம்பி வியனுக்கு எட்டு வயது , அவர்களின் பெற்றோர்கள் இருவருமே வேலை செய்கிறார்கள், வீட்டிற்கு வர ஏழு மணி ஆகி விடும், அதுவரை தீராவும் வியனும் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.

“ அக்கா எனக்கு லேசா காய்ச்சல் அடிக்குற மாதிரி இருக்குல்ல “

“ டேய்.. என்ன ஸ்கூலுக்கு லீவு போட திட்டம் போடுறியா? “ முறைத்தாள் தீரா.

“இன்னைக்கு வியாழன் கிழமை தான். இன்னும் ஒரு நாள் இருக்கே சனிக்கிழமைக்கு, நாம நாளைக்கு லீவு போட்டிருவோமா “,

“சும்மா இருடா “ அவனை அதட்டினாள் தீரா.

 தீராவுக்கும் பள்ளி செல்வதில் அதே சலிப்பு தான். 

தீரா முகம் கழுவி விட்டு வீட்டிற்குள் நுழைய,  வியனோ எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்தான்,

“ என்னடா.. “

“ உஸ்ஸ்.. “ என அவள் வாயை பொத்தி விட்டு , ஸ்கூல் பேக்கை சுட்டி காட்டினான், தீராவும் பார்த்தாள், அதிர்ச்சியில் அவள் கண்கள் நிலைகுத்தி நின்றது.

அவள் ஸ்கூல் பேக்கிலிருந்து ஒரு குட்டி ரோபோ பதுங்கி, பதுங்கி வெளியேறி, அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தது, அது சுதாரிப்பதற்குள் வியன் சட்டென பாய்ந்து அதனை கையில் பற்றிக் கொண்டான், அது ஒரு ஜான் உயரமே இருக்கும் சிறிய ரோபோட்,  பென்சில் பாக்ஸ் போன்று உடம்பும், பேனா போன்று இரண்டு குச்சி கைகளும், நடுவில் இரண்டு பெரிய கோழி முட்டை கண்களும் இருந்தது. கால்களுக்கு பதிலாக குட்டி சக்கரம் இருந்தது.

“ தீரா.. எனக்கு தெரியாம பொம்மை வாங்கி வச்சிருக்கியா . அப்பாட்ட சொல்லி தரேன் பாரு “

“ இது என்னுது இல்லடா.. “

“ ஐ.. பொய்.. பொய்.. “ அவன் சொல்லி முடிப்பதற்குள், மூன்றாவதாக ஒரு குரல் கேட்டது,

“ நான் பொம்மை இல்ல “ 

அந்த ரோபோ தான் பேசியது.

வியன் பயத்தில் அதை கீழே போட்டு விட்டு, தீராவின் பின்னால் ஒளிந்து கொண்டான்.

தீராவுக்கும் பயம் தான், தம்பிக்கு தெரியாமல் மறைத்தவள், 

“ யார் நீ “ என்றாள் அதட்டலாக

“ நான்.. மோஜோ .. எங்க ஊரு, சிலிக்கான் நகரம், நான் தெரியாம இங்கே வந்துட்டேன்.. என்னை விட்டுருங்க ப்ளீஸ்.. “ குட்டி ரோபோ அழத் தொடங்கியது.

அதன் அழுகையை பார்த்த வியனுக்கு மனம் தாளவில்லை,

“ மோஜோ.. மோஜோ.. அழாதே.. நாங்களும் உன்னை மாதிரி குட்டி பசங்க தான்.  “

குட்டி ரோபோ அவனை சோகமாக பார்த்தது, “ ப்ளீஸ் என்னை எங்க வீட்டுல விட்டுருங்க.. என் அப்பா அம்மா தேடுவாங்க”

“ நீ எப்படி இங்கே வந்த..” என்றாள் தீரா

குட்டி ரோபா தன் பென்சில் பாக்ஸ் உடம்பை திறந்து குட்டி ரிமோட் போன்ற ஒரு பொருளை எடுத்தது..  அதில் மூன்று பட்டன்கள் இருந்தன.

“ இந்த ரெட் பட்டனை அமுக்கி தான் இங்கே வந்தேன்.. “

“ ஓ.. அப்போ அதே பட்டனை அமுக்கி திரும்பி போக வேண்டியது தானே.. “

“ அமுக்கினேனே.. எதுவுமே நடக்கலியே “ தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டது குட்டி ரோபோ.

வியன் அந்த ரிமோட் சாதனத்தை எடுத்து ஆராய்ந்தான் “ இவ்வளவு தான் விசயமா... இருக்குறது மூணு பட்டன், சிவப்பு இல்லைன்னா கருப்பை அமுக்கி பார்க்கலாமே.. “ டக்கென கருப்பை அமுக்கி விட்டான்.

அடுத்த நொடி அந்த ரிமோட் சாதனம் விசாலமான அலமாரியாக மாறி, அவனை உள்ளே இழுத்துக் கொண்டது, தீரா பதறியவளாக அவன் கையை பிடித்து இழுத்தாள். குட்டி ரோபோ மோஜோவும் அவளுடன் சேர்ந்து இழுத்தது, ஆனால் அலமாரியின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கவே, மூவரும் அலமாரிக்குள் சென்றனர். அனைவரையும் விழுங்கி விட்டு மீண்டும் அது குட்டி ரிமோட்டாக உருமாறி, அப்பாவி போல படுத்துக் கொண்டது.

அன்பான வாசகர்களே முழு கதையை படிக்க கீழ் கண்ட அமேசான் லிங்கில் கிளிக்கவும்.

இது ஒரு போட்டிக்கான சிறார் கதை. இதில் இறுதி சுற்றுக்கு செல்ல உங்கள் review தேவை. தயவு செய்து உங்கள் review அமேசானில் பதிவு செய்யுங்கள்..

புத்தகம் இலவசமாக கிடைக்கிறது.
இன்றே டவுன்லோட் செய்யுங்கள்.

https://www.amazon.in/dp/B086Z9HNTB/ref=cm_sw_r_wa_apa_i_SHvKEbQATB5AN

என் சிறுகதைகள்Where stories live. Discover now