முகிலன் கத்தி குத்துபட்ட நாள்..
நூலகத்தில்.....
"மூவ் மூவ் "என்று சொல்லி போலீஸ் நூலகத்திற்குள் சென்றது...ஏதாச்சும் தடயம் கிடைக்குத்தான்னு பாருங்க என்றான் கனகவேல்....அங்கு வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகத்தை போலீஸ் நோட்ட மிட்டது..அதில் ஒரு புத்தகத்திற்குள் மட்டும் ஏதோ அடைத்து வைத்தார் போல புடைத்து காணப்பட்டது...போலீஸ் அதை பார்த்தது..அந்த புத்தகத்தை எடுத்து பார்த்தான் அந்த போலீஸ்..."சார் இங்க வாங்க...."என்று அவன் அழைக்க...கனகவேல் விரைந்தான்.........
போலீஸ் ஒரு பாக்கெட்டை எடுத்து நீட்டினார்..போலீஸ் அந்த பாக்கெட் ஐ திறந்தான்...நுகர்ந்து பார்த்துவிட்டு "இது கஞ்சா தான்" இந்த காலேஜ்ல உள்ள எல்லாரோட பக்,பாக்கெட்லையும் செக் பண்ணுங்க...போலீஸ் தீவிர தேடுதலில் இறங்கினர்...எதுவும் சிக்கவில்லை...சரி விடுதியில தேடுங்க என்று கட்டளையிட்டான் கனகவேல்.......
சிறிது நேரம் கழித்து...
ஒரு பையினுள் இருந்து கஞ்சா பொட்டலத்தை போலீஸ் கைப்பற்றியது....
திடுக்கிட்டான் அப்துல்,ராஜா...ஆம் கைப்பற்றியது அவர்களது அறையிலிருந்து.....இது யார் பை என்று கனகவேல் கேட்க...அப்துல் ராஜாவைப் பார்த்தான்....ராஜா ஒன்றும் புரியாதவனாய் நின்றான்...ஏனென்றால் எடுத்தது ராஜாவின் பையிலிருந்து...
இப்பொழுது...
போலீஸ் கனகவேல்: என்ன யோசிக்க உன்கிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே?? ...
ராஜா முகிலனுடன் நடந்த தனது முதல் நாள் அனுபவத்தை நினைத்த படியே போலீசிடம் பேச ஆரம்பித்தான் திக்கு முக்கு குரலில்.. ..
ராஜா:ஆமா சார் முகிலன எனக்கு காலேஜ் முதல் நாள்ல இருந்தே தெரியும் அவன் என்னோட பெஸ்ட் ..
போலீஸ்: டைரக்ட் ஆஹ் மேட்டர்க்கு வா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனை?
ராஜா பதட்டத்துடன் போலீஸ் கனகவேலை பார்த்தான்.
"அதெல்லாம் இல்லையே" !! என்று போலீஸ் கூறியதை ராஜா மறுக்க..
போலீஸ்: மிருதுளா தெரியுமா?
ராஜா: ஹ்ம்ம் தெரியும் என்னோட கிளாஸ்மேட் தான் ..
போலீஸ்: வெறும் கிளாஸ்மேட் தானா??
ராஜா: பிரண்ட் சார்...முகில் எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே மாதிரி தான் மிருதுளாவும்..
போலீஸ்: இங்க பாரு தம்பி ..நான் கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லணும்...நீ இப்படியே சொல்லிட்டு இருந்தீனா முழு கேசையும் உன் மேல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்..
ராஜா: இப்போ நா என்ன தப்பா சொல்லிட்டேன்?? மிருதுளா என் பிரண்ட் ஆஹ் இல்ல கிளாஸ்மேட் ஆஹ் ன்னு இப்போ முக்கியமா உண்மையான குற்றவாளிய கண்டுபிடிங்க ...
போலீஸ்: உன்னோட பெஸ்ட் பிரன்ட் மிருதுளா தான் சொன்னா உனக்கும் முகிலனுக்கும் ஏதோ பிரச்சனை இருக்குனு ..உண்மையா?
ராஜா: ஆமாம் ..இருந்துச்சு..ஆனா இப்போ இல்லை..
போலீஸ்: இப்போ எப்படி இருக்கும்?? அதான் கொன்னுட்டியே!!!அது மட்டுமில்லாம உன்னோட பையில கஞ்சா இருந்திருக்கு..
என்ன??கஞ்சாவா ..என்ன சார் சொல்றீங்க?எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை யாரோ கேஸ்ச டைவெர்ட் பண்ண பாக்கங்க.. நான் என்னோட நண்பன கொலை செய்வேனா?? என்று தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு தவறுகளையும் "இல்லை சார்" என்று ராஜா மறுக்க..
போலீஸ் ராஜா கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தான்..
போலீஸ்: கான்ஸ்டபிள் இவன போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போங்க அங்க நம்ம ஸ்டைல்ல தம்பிட்ட விசாரிப்போம் ..
கான்ஸ்டபிள் ராஜாவை காலேஜிலிருந்து காரில் ஏற்றினர்..ராஜா சுற்றும் முற்றும் பார்த்தான் எல்லாரும் அவனை பார்த்தனர்..மிருதுளா கண்களில் கண்ணீருடன் ராஜாவை குற்றவாளியை பார்ப்பது போல் பார்த்தாள்..
தொடரும்...
YOU ARE READING
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????