அத்தியாயம் 8

147 18 25
                                    

இப்பொழுது...(முகில் இறந்த பிறகு)..

அப்துல்: கொஞ்சம் அவசரம் பணம் வேணும்!!!!

மிருதுளா: நீ திருந்த போறதுல,இங்க போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க இந்த நேரதுலையும் உனக்கு வேணுமா?

அப்துல்: ஹ்ம்ம் வேணும்...என் கவலைய மறக்கணும் 

மிருதுளா: போடா முட்டாள்..

திடீரென்று ஆக்ரோஷமானான் அப்துல்.....

அப்துல்: இப்போ மட்டும் நீ குடுக்கலனா ...நான் உனக்கு எதிரா எனக்கு தெரிஞ்ச விஷயத்தை பத்தி சொல்ல வேண்டி இருக்கும்..

மிருதுளா: எந்த விஷயம்??

அப்துல்: முகிலன் இறந்த விஷயம்..

அப்போது வரை கம்பீரமாக பேசிய மிருதுளா,,,தாழ்ந்த குரலில் சரி சரி தரேன்,,என்று கூறி போனை கட் செய்தாள்..

பவித்ரா: ஏன் பதட்டமா இருக்க?

மிருதுளா: ஒன்னும் இல்லடி..

************************************

போலீஸ் நிலையத்தில்.......

போலீஸ் கனகவேல் "உங்களுக்கும் முகிலனுக்கும் முன்னாடியே தகராறு இருந்திச்சுன்னு கேள்விபட்டேன்??உண்மையா?" என்று ப்ரியாவின் அப்பாவிடம் கேட்டான்..

"ஆமாம் சார்,,கல்யாண மேடையிலே என்னை அசிங்க படுத்தினவங்க...அத மட்டும் என்னால மறக்க முடியாது.."
என்று ப்ரியாவின் அப்பா கூறும்பொழுது அவரின் கண்களில் ஆக்ரோஷ தீ எரிவதை கனகவேல் கவனித்தான்..

அவனின் பார்வையை கவனித்த கனகவேல் "அதுனால முகில கொலை செய்ய அவன் காலேஜ்க்கு போனீங்களா?" என்று கேள்வி எழுப்பினான்..

குழப்பத்துடன் " ஐயோ,, இல்ல சார்...பிரியா அங்க இருக்கான்னு தெரிஞ்சிச்சு அதான்  போனேன் .." என்று கனகவேல் கூறியதை ப்ரியாவின் அப்பா மறுத்தார்..

பிரியா அங்க இருந்தான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?? என்று கனகவேல் கேள்வி எழுப்ப..

மிருதுளா சொன்னா சார்.. என்று புதிய ஒரு திடுக்கிடும் வார்த்தையை தன் நாவினால் உதிர்த்தான்..

கல்லூரி மர்மம்Where stories live. Discover now