கல்லூரி மர்மம்

427 27 8
                                    

கல்லூரி மர்மம்

அத்தியாயம்-1

அது ஒரு பொறியியல் கல்லூரி..அங்கு ஒரு விழா கோலாகலமாய் நடந்து கொண்டிருந்தது..அந்த விழாவை சிம்போசியம் என்று அழைப்பார்கள். பிற கல்லூரி மாணவர்கள் ஒரு கல்லூரிக்கு வந்து தங்களது படிப்பு மற்றும் கலை திறமைகளை காண்பிப்பார்கள்..மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் அந்த விழாவில் இரண்டாவது நாள் ஆடல் பாடல் போட்டிகள் வைப்பது வழக்கம்..அது அந்த விழாவின் இரண்டாம் நாள்..கல்லூரியில் உள்ள எல்லா மாணவர்களும் மகிழ்ச்சியில் திளைத்த நாள் அது..

மதியம் ...

எல்லோரும் சாப்பிட ஒருவருக்கொருவர் முந்தி அடித்துக் கொண்டு சென்றனர்.."இந்த முகிலனை எங்க?..ஏய்! பவித்ரா முகிலனை பாத்தியா??" என்று மிருதுளா தனது எதிர்க்க வந்த பவித்ராவிடம் கேக்க.."இல்லையேடி!!சாப்பாடு போட்டுட்டாங்களாம் வாடி போய் சாப்பிடலாம்" என்றாள் பவித்ரா..."இல்லடி நான் முகிலனை பாத்துட்டு வரேன் நீ போ"என்றாள் மிருதுளா..உனக்கு எப்போதான் இந்த முகிலன் பைத்தியம் விடுமோ என்று கூறி தலையில் அடித்தபடி பவித்ரா சென்றாள்..
மிருதுளா முகிலனை தேடி ஒவ்வொரு வகுப்பு அறையையும் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள்..அனைத்தும் வெறிச்சோடி  போய் இருந்தது...அப்போது நூலகத்திலிருந்து ஓர் மரண ஓலம்..அது முகிலனின் குரல் தான் அதில் மாற்று கருத்தே இல்லை என்று எண்ணிய மிருதுளா..சத்தம் வந்த இடத்தை நோக்கி நடந்தாள்..நூலகத்திற்குள் சென்றாள் அங்கு யாருமே இல்லை... மெதுவாக முகில் முகில் என்று கூறிக்கொண்டே முன்னேறி மிருதுளா சென்றாள்..அப்போது ஒரு ஓரத்தில் யாரோ இருப்பது போல் தெரிந்தது..முன்னேறி மெதுவாக சென்றாள்..அப்போது அங்கு  இருவர் இருந்தனர். அந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நேர் மறையாக நின்று கொண்டிருந்தனர்..மிருதுளா தனது தலைகளை அசைத்து யார் என்று பார்க்க முயல்கிறாள் 'தொப்'பென்று அதில் ஒருவன் விழுகிறான். விழுந்தவனின் வயிற்றில் இருந்து இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக பரந்து விரிந்து வழிந்தோடிக் கொண்டிருந்தது. அதிர்ச்சியில் மிருதுளா .. அது முகிலனின் சடலம்..அதிர்ச்சியில் உறைந்த மிருதுலா தனக்கு முன் நின்ற உருவத்தின் பின் புறத்தை கண்டாள். ஆனால் அந்த உருவம் தனது கையில் கத்தியை பிடித்திருக்க..படக்கென்று அந்த உருவம் மிருதுளாவை நோக்கியது.. சூரிய ஒளி பட்டு  கத்தி மின்னியது ..அலறியடித்து மிருதுளா அங்கிருந்து ஓடினாள்....அவளை அவன் பின்தொடர்ந்தான்... மிருதுளாவின் நெஞ்சு படபடக்க.. வியர்வை முகத்தில் ஆக்கிரமிப்பு செய்ய..கை கால்கள் நடுக்கம் கொண்டிருக்க..அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் மட்டும் தான் நூலகத்தை விட்டு வெளியேறுவது..வாசல் அருகில் சென்ற அவள் தடுக்கி விழுகிறாள்...அவனும் பின்னாடி வர....மிருதுளாவிற்கு எதிர்த்து வந்த ஒருவன் விழுந்த மிருதுளாவை தாங்கி பிடித்தான் அது  லைப்ரரியன்.."ஏம்மா இப்படி ஓடி வர என்னாச்சு??"என்று அவன் கேக்க.."அதோ அதோ என்று திக்கு முக்கு குரலில் தனது நடுங்கிய கைகளை அந்த உருவத்திற்கு எதிராக உயர்த்தினாள்...

தொடரும்.....

கல்லூரி மர்மம்Dove le storie prendono vita. Scoprilo ora