போலீஸ் கனகவேல்: என்ன யோசிக்க உன்கிட்ட கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவே இல்லையே?? ..
ஆமா சார் முகிலன எனக்கு காலேஜ் முதல் நாள்ல இருந்தே தெரியும் அவன் என்னோட பெஸ்ட் ..என்று ராஜா சொல்லிக்கொண்டிருக்கும் போது நடுவில் தடுத்த கனகவேல் டைரக்ட் ஆஹ் மேட்டர்க்கு வா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்சனை?
ராஜா பதட்டத்துடன் போலீஸ் கனகவேலை பார்த்தான்.
"அதெல்லாம் இல்லையே" !! என்று போலீஸ் கூறியதை ராஜா மறுக்க..
மிருதுளா தெரியுமா?
ஹ்ம்ம் தெரியும் என்னோட கிளாஸ்மேட் தான் ..என்று ராஜா கூற...
போலீஸ் கனகவேல்: வெறும் கிளாஸ்மேட் தானா??
ராஜா: பிரண்ட் சார்...முகில் எனக்கு எவ்ளோ முக்கியமோ அதே மாதிரி தான் மிருதுளாவும்..
போலீஸ்: இங்க பாரு தம்பி ..நான் கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லணும்...நீ இப்படியே சொல்லிட்டு இருந்தீனா முழு கேசையும் உன் மேல போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்..
ராஜா: இப்போ நா என்ன தப்பா சொல்லிட்டேன்?? மிருதுளா என் பிரண்ட் ஆஹ் இல்ல கிளாஸ்மேட் ஆஹ் ன்னு இப்போ முக்கியமா உண்மையான குற்றவாளிய கண்டுபிடிங்க ...
போலீஸ்: உன்னோட பெஸ்ட் பிரன்ட் மிருதுளா தான் சொன்னா உனக்கும் முகிலனுக்கும் ஏதோ பிரச்சனை இருக்குனு ..உண்மையா?
ராஜா: ஆமாம் ..இருந்துச்சு..ஆனா இப்போ இல்லை..
போலீஸ்: இப்போ எப்படி இருக்கும்?? அதான் கொன்னுட்டியே!!!அது மட்டுமில்லாம உன்னோட பையில கஞ்சா இருந்திருக்கு..
என்ன??கஞ்சாவா ..என்ன சார் சொல்றீங்க?எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லை யாரோ கேஸ்ச டைவெர்ட் பண்ண பாக்கங்க.. நான் என்னோட நண்பன கொலை செய்வேனா?? என்று தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு தவறுகளையும் "இல்லை சார்" என்று ராஜா மறுக்க..
போலீஸ் ராஜா கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தான்..
போலீஸ்: கான்ஸ்டபிள் இவன போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போங்க அங்க நம்ம ஸ்டைல்ல தம்பிட்ட விசாரிப்போம் ..
கான்ஸ்டபிள் ராஜாவை காலேஜிலிருந்து காரில் ஏற்றினர்..ராஜா சுற்றும் முற்றும் பார்த்தான் எல்லாரும் அவனை பார்த்தனர்..மிருதுளா கண்களில் கண்ணீருடன் ராஜாவை குற்றவாளியை பார்ப்பது போல் பார்த்தாள்..
ராஜா போலீஸின் காரில் அமர்ந்தான்..தனது நண்பனான முகிலனின் நினைவுகள் அவனது மனதில் அசை போட்டது..
தொடரும்...
YOU ARE READING
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????