ஆறு மாதங்களுக்கு முன்பு...
விஸ்வநாதன் அந்த குடோனில் கட்டிப் போடப் பட்டிருக்கும் தனது மகனை பார்த்து அதிர்ந்தான்...தான் கொண்டு வந்த கத்தியை கீழே போட்டு விட்டு இவங்கள்ட்ட எப்படி மாட்டுன என்று கூறி அவனது கட்டை அவிழ்த்துக் கொண்டிருந்தான் அப்போது எதுவும் தெரியாத அப்துல் அங்கிள் அந்த கத்தியை வச்சே அறுங்க என்றான் ...கீழே போட பட்ட கத்தியை எடுத்து கொண்டு முகிலனின் கட்டை அறுத்துக் கொண்டிருந்தான் ..உங்களோட உண்மையான முகம் இதுதானா அப்பா??என்று கண்கலங்கிய முகிலன் கேக்க... அனைவர்க்கும் அதிர்ச்சி விஸ்வநாதன் முகிலோட அப்பாவான்னு ..இந்த வாழ்க்கைல சில சமயம் நாம எடுக்கிற முடிவு அதில இருந்து மீள முடியாது அத நிறுத்தவும் முடியாது பணத்தாசை புடிச்சு நான் அன்னைக்கு எடுத்த முடிவ நினைச்சி இப்போ வருத்த படுறேன் என்றான்..முகிலன் தனது தந்தையை ஒரு மாதிரி பார்க்க....சங்கடத்துடன் விஸ்வா கயிறை அறுத்தான்..அங்கிருந்து ராசு(காளிக்கு கையாள்) நீங்க என்ன பண்ணுறீங்க?? பாஸ் சொன்னதை மட்டும் செய்ங்க என்றான்..நா அவன்கிட்ட சொல்லிடுறேன் இப்போதைக்கு இவங்க எல்லாரும் போகட்டும் என்று கூறி கீழே குனிந்து ப்ரியாவின் கையில் கட்டப்பட்டிருக்கும் கயிறை அருத்துக் கொண்டிருந்தான். பாஸ் சொன்னதை நீ செய்யலனா ரொம்ப வருத்தப்படுவ என்று ராசு கூறினான்...அப்போது ப்ரியாவின் முகம் மாறியதை கீழே குனிந்து கொண்டிருக்கும் விஸ்வநாதன் கவனித்தான்...அவனது தலையில் ஏதோ இடிப்பது போன்று தோன்றியது திரும்பி பார்த்தான் விஸ்வா ..துப்பாக்கி முனையில் விஸ்வாவின் தலை..மறுமுனையில் ராசு.. அறுத்துக் கொண்டிருந்த விஸ்வநாதன் அதை விட்டுட்டு எழுந்தான் ..கத்தியை கீழே போடு என்றான் ராசு ...கீழே போட்ட விஸ்வநாதனின் தலைக்கு குறிப்பார்க்கபட்ட துப்பாக்கியை மெதுவாக அவனது நெஞ்சிற்கு இறக்கினான் ராசு...அதிர்ச்சியில் முகிலன் உறைந்திருக்க...உன்னால இந்த காரியத்தை செய்ய முடியலனா விட்டுடு வேற ஆளு பண்ணிப்பாங்க என்றான் ராசு...இதோ பாரு ராசு அங்க இருக்கிறது என்னோட பையன் நான் அவன்கிட்ட(காளி) இத பத்தி சொல்லுறேன் காளி புரிஞ்சிப்பான் என்று பயத்தில் திக்கி திணறி வார்த்தைகளை உதிர்த்தான் விஸ்வநாதன்..உனக்கே தெரியும் என்னோட விசுவாசம் காளி அண்ணா மட்டுமே காளி அண்ணா சொல்றத செய்றது ,சொல்றத செய்றாங்களான்னு கவனிக்கிறது இதுதான் என்னோட வேலை என்றான் ராசு..
YOU ARE READING
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????