2 வருடத்திற்கு முன்பு...
ராஜா,முகில்,அப்துல் மூவருக்கும் சிநேகிதம் உருவான நேரம் அது...
இரவு..
ராஜா,"சாப்பிடுவோமா? இன்னைக்கு சிக்கன் போட்றாங்கலாம்"..ஆம் விடுதியில் சிக்கன் என்றால் அங்கு கோலாகலமே!! அப்போது முகில், "பசிக்கல நீ போ".. என்று மறுக்க..
என்ன பிரச்சனை?ஏன் இன்னைக்கு முழுக்க அமைதியாவே இருக்க?? என்று ராஜா கேக்க..
அதற்கு முகில் "அதுவந்து என் காதலியோட பிரச்சனை..சாப்பிட தோனல"..
முகிலன் காதலிப்பதை அறியாத அப்துல் நீ லவ் பண்றியா? சொல்லவே இல்லை.என்று ஆவலாக கேக்க..நீ கேக்கவே இல்ல அதான் நான் சொல்லல..என்று முகில் கூறி முடித்தான்..உடனே ராஜா எல்லாம் சரி ஆகிடும் ..கோவத்தை எப்போதும் சாப்பாடு மேல காமிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க வா போலாம்..என்று அவனை சமாதான படுத்தினான்..ராஜாவின் பேச்சுக்கு பச்சை கொடியும் காண்பித்தான்..அதற்கு சிரித்துக்கொண்டே அப்துல் "என்ன மச்சா..கோவம் போச்சு போல!!! என்று விளையாட்டு தனமாக சொல்ல..
அமைதியா இரு அப்துல் ..காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடல அவன்ட இப்படி பேசி மனச மாத்திடாத என்று ராஜா அப்துலை அடக்கி மூன்று பேரும் சாப்பிட சென்றனர்...கூட்டம் அலை மோதியது.....
ஒருவழியாக ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில் சாப்பாடை வாங்கினர்..ராஜா கூட்டத்தில் தடுக்கி லம்பினான்..எப்படியோ கீழே விழாமல் நின்றுவிட்டான் ஆனால் கையிலுள்ள தட்டை பறக்க விட்டான்...அவன் நேரமோ தெரியவில்லை அது சீனியர் ஒருவரின் சட்டையில் கொட்டியது..காலி!!!! என்று கூறி அப்துல் தலை மேல் கை வைக்க..
தெரியாம இப்படி ஆச்சு...என்று ராஜா கூற..
சீனியர் ரமேஷ்: தெரிஞ்சே யாராச்சும் அதுவும் சீனியர் மேல கொட்டுவாங்களா? ..பரவாயில்லை போ தம்பி போ...
நிம்மதி பெருமூச்சு ..எல்லா சீனியரும் கொடுமைக்காரர்கள் இல்லை போல என்று ராஜா நினைத்து நகன்றான்..
இப்பொழுது...
கல்லூரியில்...
நீ செஞ்சது கொஞ்சம் கூட சரி இல்ல...ராஜாவ ஏன் இதுல கோர்த்து விட்ட??...என்று அப்துல் மிருதுளாவிடம் கேட்க
BINABASA MO ANG
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????