அத்தியாயம் 6

180 18 8
                                    

ஒன்பது மாதங்களுக்கு முன்பு:

"முகில் நில்லு ஏய் நில்லு டா",...என்று மிருதுளா ஓடி வர...முகில் எதுக்கு இப்டி கூப்பிட்டுக்கொண்டு ஓடி வர யாராச்சும் பாத்தா  என்ன நினைப்பாங்க?? அத பத்தி கவலை இல்லை...இத்தனை வருஷத்துல நீ என்னை கண்டுகிட்டது கூட இல்ல...ஆனா உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும்...அதற்கு முகில் .."சரி அதுக்கு"??என்று கேட்க..சரியான மடசாம்பராணியா இருப்பான் போலையே என்று நினைத்துக்கொண்டு ஒன்னுமில்ல இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் உனக்கு என்ன வேணும்னு சொல்லு? என்று மிருதுளா ஆர்வமாக கேக்க..இல்ல அதுலாம் ஒன்னும் வேண்டாம் என்று திக்கி தடுமாறி சொல்லிக் கொண்டிருந்தான்..அப்போது சிவ பூஜைல கரடி புகுந்தது போல "என்னது, ட்ரீட் ஆஹ்..நாங்க வாரோம்" என்றான் அப்துல்...மிருதுளா,நிம்மதியா இருக்க விடமாட்டானே இந்த அப்துல் என்று மனதிற்க்குள் புலம்ப...அப்துலோ மிருதுளாவின் மனதை அறிந்து கொண்டு "நிம்மதியா இருக்கவிடவே மாட்டேன்" என்று சிரிப்புடன்  கூறி வாங்க கேன்டீன் போலாம் மிருதுளா பிறந்தநாளை கொண்டாட ...என்றான்...மிருதுளாவோ என் காசுலதான கொண்டாடிருவோம் என்றாள் பொய் சிரிப்புடன்.....

கேன்டீனில்.....

அப்ரோ முகில் உன்ன பத்தி ஏதாவுது சொல்லு என்று மிருதுளா கேக்க..அப்துலோ அதான் தெரியும்னு முன்னாடியே சொன்னியே என்று முகில் பேசுவதற்குள் சட்டென சொன்னான்...ராஜா அப்துலை அமைதியா இரு மச்சா இல்லனா மிருதுளா இந்த காபிய உன் மூஞ்சில ஊத்திருவா என்றான்..இங்க ரொம்ப டிஸ்ட்டர்பென்ஸா இருக்கு நாம பேஸ்புக்ல பேசுவோமா???? என்று மிருதுளா வினவ....முகிலன் பேஸ்புக்ல இல்லை என்றான் ராஜா.....முகிலனை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் ராஜாவும் அப்துலும் பதிலளித்ததைக் கண்டு ,"இத எதுக்கு நீ சாப்பிடுற உன் பிரின்ட்ஸ்கே குடுத்தர வேண்டிதான என்று கூறிய மிருதுளா முகிலன் தட்டில் உள்ள பப்ஸை எடுத்து ராஜா தட்டில் வைத்து விட்டு ஹாஸ்டல்க்கு போறேன் லேட்டாகிட்டு என்று கூறி சென்றாள்.......
முகில் நான் லைப்ரரி போறேன் என்று கூறி எழுந்து சென்றான்....."ஏங்க...நில்லுங்க..என்று மிருதுளாவை துரத்தினான் முகில்.. திரும்பிய மிருதுளா முகில் மட்டும் தனித்து வந்திருப்பதை பார்த்தாள்..சொல்லு என்றாள் மிருதுளா ..பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று கூறி விட்டு கை குலுக்க கையை நீட்டினான்.
அதை பார்த்த மிருதுளா சிறிது புன்முறுவளோடு எனக்கு இன்னைக்கு பிறந்தநாள் கிடையாது என்று கூற...ஏன் பொய் சொன்னீங்க என்று முகிலன் வினவ...  ''டியூப்லைட், நான் ரொம்ப நாளா சொல்லணும்னு நெனச்ச விஷயம்,நான் உன்னை லவ் பண்றேன்" என்று படக்கென்று கூறினாள்....கொஞ்சம் அதிர்ச்சியில் முகிலன் உறைய பதிலுக்காக மிருதுளா அவனை நோக்க...அங்கிருந்து மச்சா நான் சொல்லல கரெக்ட் ஆஹ் இங்க தான் வந்திருப்பான்னு என்று அப்துல் சொல்லிக்கொண்டே ராஜாவுடன் வந்து கொண்டிருந்தான்...  மிருதுளாவும் முகிலனும் திரும்பி் பார்த்தார்கள் கொஞ்சம் தொலைவில் இருவரும் வந்து கொண்டிருந்தனர்...''அதுல இஷ்டம் இல்லை எனக்கு"..என்று முகிலன் சொன்னான்.....மிருதுளா இதை கேட்டுவிட்டு முகம் சுருங்கியது "சரி நான் போறேன்" என்று கூறி ஏமாற்றத்துடன் சென்றாள்.....
நடந்ததை முகிலன் வந்த இருவரிடமும் சொல்ல.."நீ தான் பிரியாவ காதலிக்கன்னு மிருதுலாட்ட சொல்ல வேண்டிதான என்று ராஜா கூற ...நீங்க சொல்ல விட்டா தான ...எப்படியும் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்ல ...என்றான் முகில்

கல்லூரி மர்மம்Where stories live. Discover now