இறுதி அத்தியாயம்

192 24 23
                                    

இரவு....

திருச்சிக்கு வந்தான் கனகவேல். விறு விறுவென்று காவல் நிலையத்திற்குள் சென்றான் ..ரமேஷை அழைத்தான் ...இங்க இருக்குற காளி,ராசு இதுல யாரும் உனக்கு கஞ்சா சப்ளை பண்ணலையா? என்று கேட்க..ரமேஷோ இல்லை சார் இவங்க இல்லை என்றான் அழுதுக் கொண்டே..சரி அப்போ இவரான்னு பாரு என்று கூறி விஸ்வநாதனின் புகைப்படத்தை காண்பித்தான்...ரமேஷ் ஆமாம் சார் இவர் தான் என்றான்..

அங்கிருந்து மற்றொரு போலீஸ் வந்தது....

சார்,கைரேகை செக் பண்ண சொன்னீங்களே சார்,,அந்த ரிசல்ட் வந்திட்டு..இதுல ராஜா,முகில்,ரமேஷ்,அப்துல் பிறகு இரண்டு புது கைரேகையும் கிடைச்சிருக்கு சார் என்றான்..அதற்கு கனகவேல் அந்த புது இரண்டு கைரேகைல ஒண்ணு மதுரை கல்லூரியின் முதல்வரோடதா இருக்கலாம் மீதி இருக்குற கைரேகை தான் குற்றவாளியோடது..சரி லைப்ரரில அன்னைக்கு நிறையா கைரேகை எடுத்தோம்ல புக்ல இருந்து டேபிள்ல இருந்து அந்த கை ரேகையோட மேட்ச் ஆகுதான்னு பாருங்க என்றான் கனகவேல்..

சிறிது நேரம் கழித்து...

சார்,லைப்ரரில இருந்து எடுத்த கைரேகையும் வாட்ச்சில் மீதம் இருக்குற இரண்டு தெரியாத கைரேகையில ஒன்னுக்கூட மேட்ச் ஆகுது சார்..என்றான் சக போலீஸ்...அப்போ கொலையாளி சம்பவம் நடந்த அன்னைக்கு லைப்ரரி குள்ள வந்திருக்கான் என்று கனகவேல் கணித்தான்...அப்போ ராஜா,ரமேஷ் இவங்களுக்கும் முன்னால யாரோ அந்த அறையில இருந்திருக்காங்க என்றும் புரிந்து கொண்டான்..

அப்போது..

போலீஸ் நிலையத்திற்கு கான்ஸ்டபிள் கல்லூரியிலிருந்து ஒரு பென்ட்ரைவ் வாங்கி வந்தான்..கனகவேல் பிற போலீஸிடம் இதுல யாரு வாட்ச்ச அந்த கப்ல (வெற்றி கோப்பை) போட்டதுன்னு பாருங்க என்றான் ..

தான் பாதியில் நிறுத்திய விசாரணையை தொடங்கினான்..

சரி அந்த விடுதி உரிமையாளரை கூப்பிடுங்க என்று கனகவேல் கூற..விடுதி உரிமையாளர் வந்தான் அவனிடம் விஸ்வநாதனின் புகைப்படத்தை காண்பித்தான் ..அதை பார்த்த விடுதி உரிமையாளர் இல்லை சார்,இவரை எனக்கு தெரியாது என்று கூறினான்..அப்போது கனகவேலின் கையில் வைத்த பிற போட்டோக்கள் கிழே விழுந்தது..கனகவேல் கீழே குனிந்து போட்டோக்களை எடுக்கும்போது இவரை தெரியுமே!!என்று விடுதி உரிமையாளர் கூறினான்..யாரு யாரை தெரியும்ன்னு சொன்ன?? என்று கனகவேல் கேக்க..கீழே கிடந்த விஸ்வநாதனும் வேறு ஒரு நபரும் உள்ள போட்டோவை எடுத்து விஸ்வா பக்கத்தில் இருப்பவரை சுட்டி காட்டி இவரை தெரியும் என்றான்..யாரு என்று கனகவேல் கேக்க..அங்கிருந்து ஒரு போலீஸ் வந்தான் சார் யாரு அந்த வாட்சை போட்டாங்கன்னு இந்த பிக்ல இருக்கு பாருங்க என்று கூறி கணினியை காண்பித்தான் ..அதில் ஒரு நபர் அந்த வெற்றிக் கோப்பையில் வாட்ச் போடுவது இருந்தது தூரமாய் இருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை...விடுதி உரிமையாளரிடம் இவரு யாருன்னு தெரியுதான்னு கேட்டான்..அதை உன்னிப்பாக கவனித்த விடுதி உரிமையாளர் சார் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ஒரு போட்டோவை காட்டுனீங்களே அதுல உள்ளவரு தான் இவரும் என்றான்...இவன் யாரு?? என்று கேட்க கல்லூரி நூலகத்தில் வேலை பார்ப்பேன்னு சொல்லிருக்கிறார்... என்னுடைய விடுதியில் அப்போ அப்போ அந்த காலேஜ் பசங்களுக்கு புத்தகத்தை குடுக்க வருவாரு என்றான். ராஜா,ரமேஷ்,அப்துல்,மிருதுளா எல்லாரும் இங்க வாங்க என்று அழைத்தான் கனகவேல்..அதில் கணினியிலுள்ள புகைப்படத்தையும்,விஸ்வநாதனின் வீட்டிலிருந்து கைபற்றிய புகைப்படத்தையும் காண்பித்து இது யார் என்று கேட்டான்..அதற்கு மிருதுளா சார்,இவரு தான் சந்திரன் சார்..நான் கூட அன்னைக்கு சொன்னேனே ராஜாவிற்கு பயந்து ஓடும்போது இவரு தான் வந்து காப்பாத்துனாருன்னு என்று கூறினாள்....

கல்லூரி மர்மம்Where stories live. Discover now