ஆறு மாதங்களுக்கு முன்பு..
அப்துல் தனது வாட்சப்பிற்க்கு வந்த மெசேஜ்களை படித்து கொண்டிருந்தான்...திடீரென்று அதிர்ச்சி ஆகினான்...அந்த செய்தியை எடுத்துக்கொண்டு முகிலனிடம் சென்றான் .."மச்சா, இது உன் ஆளான்னு பாரு"..என்று கூறி போனை முகிலனிடம் கொடுத்தான்....போனை வாங்கி பார்த்தவுடன் முகம் சட்டென்று மாறியது,,,,
கண்கலங்கியவாறு கட்டிலில் செய்வதறியாது அமர்ந்தான்......
அங்கு பெண்கள் விடுதியில்...
மிருதுளாவின் போன் ஒலி எழுப்பி கொண்டே இருந்தது..அதை பார்த்து விட்டு .."ம்ச்"..என்று அலுப்புடன் போனை எடுக்காமல் தவிர்த்தாள்....
பவித்ரா "யாருடி???" என்று கேட்க
அலட்சியமாக மிருதுளா "வேற யாரு பிரியா தான்.." என்று பதிலளித்தாள்.
"கால் அட்டெண்ட் பண்ணு, ஏதாச்சும் முக்கியமான விஷயமா இருக்க போகுது?"
முக்கியம்லாம் இல்லடி அவளுக்கு நாளைக்கு கல்யாணமாம்...ஒரு வாரம் முன்னாடி தான் அவளுக்கே தெரியும் போல... அன்னைக்கே என்ட்ட சொல்லிட்டா முகிலன்ட்ட விஷயத்தை சொல்லி அவளை(பிரியாவ) கூப்டுட்டு போனுமாம்....
மிருதுலாவின் இந்த காரியத்தை பார்த்து எரிச்சலடைந்த பவித்ரா "ச்சீ,, ஏன் இப்படி இருக்க? இதுலாம் தப்பு.."
எதுடி தப்பு..என்ன காதலிச்சு ஏமாத்துனது மட்டும் தப்பு இல்லையா??
இப்போ நான் இந்த விஷயத்தை முகிலன்ட்ட மட்டும் சொன்னா என்ன ஆக போகுது..வேற பொண்ண பார்த்துட்டு போய்ட்டே இருப்பான்..அதுக்கு அவளுக்கு கல்யாணம் ஆகுறதுதான் நல்லது..நான் செய்றதுதான் கரெக்ட்....இன்னொரு பொண்ண அவனால ஏமாற விடமாட்டேன் பவித்ரா,,..நீ என்ன தப்பாவே நெனச்சாலும் பரவா இல்ல...
அங்கு ஆடவர் விடுதியில்...
நல்லவேளை பிரியாவோட தோழி நம்பர் கொஞ்சம் நாளைக்கு முன்னாடி கிடைச்சது...இல்லன்னா இந்த விஷயம் தெரியாமையே போயிருக்கும்..என்று அப்துல் கூறினான்..
YOU ARE READING
கல்லூரி மர்மம்
Mystery / Thrillerகல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????