அத்தியாயம் 12

150 12 6
                                    

கனகவேல் பிரியா மீது எழுப்பிய சந்தேகக் கேள்வியை நிராகரித்தாள்..இல்லை சார் நான் முகிலனை கொலை பண்ணல என்று கூறினாள்..ஆனால் கனகவேல் அவள் கூறியதை நம்புவதாக இல்லை...

சரி ராஜாக்கும் உனக்கும் என்ன தொடர்பு?என்று கனகவேல் கேக்க..அதற்கு மிருதுளா

சார் நான் ராஜாவை நல்ல தோழனா தான் பாத்தேன் ஆனால் ஒரு முறை என்னை காதலிப்பதாக சொன்னான்.. அப்போ நான் முகிலன லவ் பண்ணிட்டு இருந்த சமயம் நான் லவ் பண்றேன் நல்ல நண்பர்களாக இருப்போம்னு சொன்னேன் அதுக்கப்பறோம் அவன் என்னிடம் நல்ல நண்பனா மட்டும் தான் இருந்தான் சார் என்றாள்..

கனகவேல் சக போலீஸிடம் மிருத்துளா,ராஜா, காளி,ப்ரியாவோட அப்பா இவங்களோட கடந்த 6 மாசத்துக்குள்ள உள்ள கால் ஹிஸ்ட்ரி எனக்கு வேணும் என்று கேட்டான்..

*************************************

ராஜா பையிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட மறுநாள்:

கனகவேல் "அந்த கல்லூரி முதல்வரிடம்(டீன்) ராஜாவோட நெருங்கிய பழக்கம் உள்ளவங்கள்ட்ட விசாரணை செஞ்சதுல ராஜாக்கு இந்த கஞ்சா பழக்கம் இல்லன்னு சொல்றாங்க..பையில இருந்து கிடைச்சத்தால அவனை சந்தேகிக்க முடியாதுல...சமீபத்துல இந்த காலேஜ்ல யாராச்சும் கஞ்சா அடிச்சி மாட்டுனவங்க இருக்காங்களா?" என்று கேட்டார்..அதற்கு அந்த கல்லூரி முதல்வர் இல்லை சார்,அந்த மாதிரி யாரும் இல்லை என்று கூற...கனகவேலோ சரி சார் இனிமே ஏதாச்சும் இந்த மாதிரி கேஸ் வந்திச்சுனா மறைக்காம சொல்லுங்க என்று கூறினான்..

**************************************

இப்பொழுது...

போதையில் மூழ்கிய அப்துல் ரமேஷிடம் "இந்தா காசு பொட்டலத்தை குடு" என்று கேட்டான்..உனக்கு என்ன பைத்தியமா??இந்த நேரத்துல கேக்க அதுவும் போதைல வேற இருக்க நாளைக்கு தெளிஞ்சு வா என்று ரமேஷ் சொல்ல.. அப்துல் உனக்கு தேவ காசு அது என்ட்ட இருக்கு தர முடியுமா முடியாதா?? என்று கேட்டு மிருதுலாவிடன் இருந்து வாங்கிய காசை நீட்டினான் அப்துல்...தர முடியாதுடா போலீஸ் கேஸ்ன்னு போய்ட்டு இருக்கு இந்த நேரத்துல தர முடியாது என்று ரமேஷ் மறுக்க ..ராஜா பையில எப்படி கஞ்சா வந்திச்சு நீதானே அவனை மாட்டிவிட்ட என்று அப்துல் ரமேஷிடம் கேட்டான்...அதை கேட்டு சிரித்த ரமேஷ் "என்ன உன் பிரண்ட் நல்லவன்னு போலீஸ்ட்ட சொல்ல போறியா?? சொல்லு என்னோட ரெகுலர் கஸ்டமர் நீ தான, சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும் என்று கூறி அப்துலிடம் இருந்து காசை வாங்கி கொண்டு ரமேஷ் கஞ்சாவை கொடுத்தான்...அதை வாங்கி கொண்டு தனது ரூம் நோக்கி சென்றான் அப்துல்.

கல்லூரி மர்மம்Where stories live. Discover now